இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையையும் அதற்கான மிகத் தெளிவான விளக்த்தையும் நமக்குக் கூறுவதை நாம் வாசிக்கிறோம். விதை கடவுளின் வார்த்தை என்பதும், அவ்வார்த்தைகளைக் கேட்கின்றவர்களின் வேறுபட்ட மனநிலைகளும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாம் இறை திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது தூய ஆவியார் நம்மிடம் குடி கொள்வார். அப்பொழுது அவர் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் ஆற்றலும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அத்தகு ஆற்றலை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள இறை திருவுளத்தை அறிந்து செயல்படும் ஞானத்தையும் அருளையும் வேண்டுவோம்.
குழந்தைகளுக்கு நாம் எப்பேற்பட்ட மனநிலையை உருவாகிகிறோம் அல்லது எப்படி சூழலில் அவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. பகிர்வு என்பது சிறுவயதில் இருந்தே வரக்கூடிய பண்பாகும். அதனை நம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம். நாளை அது வளர்ந்து மரமாகி அனைவருக்கும் பயன் தரும்.