“ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். யாக்கோபு 2-18. நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார். லூக்கா 8-46. பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடுள்ள பெண் எப்படியாவது சுகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி,மக்கள் கூட்டம் என்றும் பாராமல், முந்தியடித்துக்கொண்டு அவருடைய ஆடையின் ஓரத்தைத் தான் தொட்டாள். என்ன ஆச்சரியம்! .யேசுவின் ஆடையிருந்து ஒரு வல்லமை வெளிப்பட்டு அந்த பெண்ணை குணமாக்கியது.
கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.
நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். யோசுவா 6-18. ஆண்டவர் நம்மை அழிவுக்கு எடுத்து செல்லும் பொருட்களை, அதாவது ஆண்டவருக்கு விருப்பமில்லாத செயல்கள் மூலமாக வந்த பணம் பொருள் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள் என கூறுகிறார்.
உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். நீதிமொழிகள் 28-20. நாம் ஆசீர்வாதத்தை விரும்பினால் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும். இன்று உலகம் உண்மையற்ற நிலைமையை நோக்கி ஓடுகிறது. எதற்கெடுத்தாலும் பொய். பொய் சொல்லி காரியத்தைச் சாதிக்க எண்ணுகிறார்கள்.கணவன் மனைவிக்குள் உண்மை இல்லை. பெற்றோர் பிள்ளைகளுக்குள் உண்மை இல்லை.
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. 1 கொரிந்தியர் 15-43,44. நீதிமான் நம்பிக்கையோடுகூட உலகை விட்டு கடந்து போகிறார். அவருக்கு ஒரு மகிமையான விண்ணக வாழ்வு பற்றி எதிர்பார்ப்புண்டு.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். திருப்பாடல்கள் 63.1-2.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1 தெசலோனிக்கர் 5-17. நாம் வேண்டுகிற ஜெபம் கிடைக்க தாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து இடைவிடாது ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் ஆண்டவர்கிட்ட கேட்டால் நிச்சயமாக அது நமக்கு கிடைக்கும். இல்லையெனில் அவர் வேறு ஒன்றை அதை விட நல்லதாக தருவார்.