மரங்களை வெட்டு என்று அதிபரும் - வெட்டாதே என்று நீதிபதியும்...?|| Veritas Tamil

ஆஃப்ரிக்க காடுகளில் மரம் வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் உத்தரவுக்கு கென்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது

காடுகள் வேகமாக அழிந்து வருவதைத் தடுப்பதற்காக 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க காடுகளில் மரங்களை வெட்டுவதற்காக விதிக்கப்பட்டிருந்த  தடையை கென்யா நாட்டின் அதிபர் ரூட்டோ ரத்து செய்ததற்கு கென்ய நீதிமன்றம் 14 நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

கென்யாவில் உள்ள காடுகளில் மரங்களை வெட்டுவதற்கான தடையை நீக்கி கென்ய அரசாங்கம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு, சமூக ஆர்வலர்கள் மற்றும் காடுகளின் பாதுகாவலர்களின் மத்தியில் இந்த முடிவு  ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது.

கிரீன்பீஸ் ஆப்பிரிக்கா என்ற காடுகளை  பாதுகாக்கும்  குழு ஒன்று கென்யாவில் உள்ள காடுகளில் மரங்களை வெட்டுவதற்க்கான  தடையை நீக்குவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது . இந்த தடையை நீக்குவதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் காடுகளின் நீண்டகால  பயன்கள் குறித்து பல கவலைகளை எழுப்பியுள்ளது  என்று பசுமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்த இயற்கை ஆர்வலர் அமைப்பு ஒன்று கென்யாவின் சட்ட அமைப்பு  மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகிய அரசுக்கு எதிராக வழக்கு  தாக்கல் செய்து தனது மனுவில், அரசாங்கம் இயற்கையின் சமநிலைக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், காடுகளை அழிப்பதை ஊக்குவிப்பதாகவும், மரம் வெட்டுவதற்கான தடையை நீக்குவதன் மூலம் காடுகளை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாகவும் வாதிட்டது.

மேலும் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கும் போது பொதுமக்களின் பங்களிப்பு இல்லை என்றும்  தடையை நீக்குவதற்கு முன், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் எந்த அறிவியல் காரணமோ, ஆராய்ச்சியோ, கொள்கை உத்தரவுகளோ, சுற்றுச்சூழல் மதிப்பீடு பாதிப்புகளோ எதுவும் அரசாங்கம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தது அந்த இயற்கை பாதுகாப்பு அமைப்பு.

சுற்றுச்சூழல் மற்றும் நில நீதிமன்ற நீதிபதி ஆஸ்கார் ஏ அங்கோட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது : மரம் வெட்டுவதற்கு எந்த உரிமம் அல்லது அனுமதி வழங்கவும் நீதிமன்றம் தடை விதித்தது. 

தற்போது நீதிமன்ற உத்தரவால் வனப்பகுதிக்கு சென்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கென்யா கடுமையான வறட்சியை எதிர்கொண்டது , இதனால் சுமார் ஆறு மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

2018 ம் ஆண்டு நடத்தப்பட்ட பணிக்குழு அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சான்று : “1999 இல் நடத்தப்பட்ட கென்யா மலை காடுகளின் வான்வழி ஆய்வில் 13,513 வகையான பழமையான  மரங்கள் புதிதாக சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. கூடுதலாக, 8,042 ஹெக்டேர் பூர்வீகக் காடுகள், தனித்தனியாக பதிவு செய்யப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாத அளவுக்கு மரங்கள் வெட்டப்படுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காடுகளில் மரங்களை  வெட்டுவதற்கான தடை 2018 இல் கென்யா முழுவதும் செயல்படுத்தப்பட்டது மேலும்  கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவால் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக  நீர் பிடிப்பு பகுதிகளை அதிகரிக்க இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது . இந்த இயற்கைக்கு ஆதரவாக அமைந்த இந்த திட்டம் வன வள மேலாண்மை மற்றும் மரம் வெட்டும் நடவடிக்கைகள் குறித்த பணிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.

ஏப்ரல் 30, 2018 அன்று கென்யா அரசால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை ஆப்ரிக்க கண்டம் முழுவதும் பெரும் ஆதரவினை பெற்று பல நாடுகளின் பாராட்டையும் பெற்றது.ஏனெனில் காடுகள் மட்டுமே ஒரு நாட்டின் வளங்களின் மதிப்பீடு என்பதை கென்யா உணர்ந்து கொண்டதாக அப்போது அனைத்து செய்திகளும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் மரங்களை வெட்ட அனுமதி அளித்திருக்கும் இந்த செயல் எதிர்காலத்தில் மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.

_அருள்பணி வி.ஜான்சன்

(Translated from Down To Earth )