குற்றம் காணாமல் இரக்கம் காட்டுவோம் | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 22ஆம் வாரம் -சனி
5 செப்டம்பர் 2026
1 கொரி 4: 6-15
லூக்கா 6: 1-5
“குற்றம் காணாமல் இரக்கம் காட்டுவோம்”
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில் பவுல், பெருமையைத் தவிர்த்து தாழ்மையுடன் வாழ வேண்டும் என்றும் கிறிஸ்துவின் பணியாளர்களைப் பற்றி தேவையற்ற பெருமை கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்குள்ள அனைத்தும் கடவுளால் கிடைத்த வரம் என்பதால், “நான் மற்றவர்களைவிட சிறந்தவன்” என்று பெருமைப்படக் கூடாது. திருத்தூதர்கள் கிறிஸ்துவுக்காக துன்பங்களையும் அவமானங்களையும் சகித்துக்கொள்கிறார்கள்; ஆனால் கொரிந்தியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டனர்என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
பவுல், திருத்தூர்கள் அனைவரும் உலகத்தின் பார்வையில் தாழ்ந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவுக்காக உண்மையுடன் பணியாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார் என்றும், பவுல் பெருமை பாராட்டும் கொரிந்தியரை கடுமையாகக் கண்டிக்காமல், தந்தை தன் பிள்ளைகளை அறிவுறுத்துவது போல அன்புடன் திருத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாகச் செல்லும்போது, சீடர்கள் கதிர்களைப் பறித்து உண்டனர். இதைக் கண்ட பரிசேயர்கள், ஓய்வுநாளில் இப்படிச் செய்வது முறையல்ல என்று குற்றம் சாட்டினர்.
அதற்கு இயேசு, தாவீது மற்றும் அவருடைய தோழர்கள் பசியினால் ஆலயத்தில் இருந்த அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்ட நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். பின்னர்,
“மானிடமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்” என்று அறிவித்ததை லூக்கா பதிவுச் செய்துள்ளார்
சிந்தனைக்கு.
நற்செய்தியில், இயேசுவின் பொதுப் பணிக்காலம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தபோதிலும், பரிசேயர்களுடன் மோதல்கள் நிகழத் தொடங்கியிருந்தன. கடவுளின் சட்டத்தை வெறும் வெளிப்புற விதியாகப் பார்க்காமல், அதன் பின்னுள்ள அன்பையும் இரக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார். உண்மையில் இயேசுவே ஓய்வுநாளின் ஆண்டவர் என்பதை அவர்களின் அறிவுக்கு எட்டவில்லை.
பரிசேயர்கள் இயேசுவை எதிர்க்கத்து துணிந்துவிட்டன். இயேசுவோ, அவர்கள் எதிர்ப்பார்த்ததைப்போல் அஞ்சவில்லை. அவர்களுடைய எதிர்ப்பை நேரடியாக எதிர்கொண்டார். ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ எனும் பாரதியாரின் வரிகள் அன்றே இயேசுவில் எதிரொலித்தது என்றால் மிகையாகாது.
இயேசுவின் சீடர்களில் பலர், இத்தகைய நோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்தபோது ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் உணர்ந்திருக்கக்கூடும். அதே சமயத்தில், நீண்ட காலமாக எளியோரை, சமயத்தின் பின்னணியில் குற்றம் சாட்டி, வதைத்து வந்த பரிசேயர்களை எதிர்க்கும் இயேசுவில் அவரக்ள் ஒருவித நிம்மதியையும் அனுபவித்திருக்கலாம். விடிவுகாலம் நெருங்கிவிட்டதாகவும் எண்ணியிருக்கலாம்.
முதல் வாசகத்தில் புனித பவுல் கூறுவதைப்போல் , கடவுள் கொடுத்த அருளையும் வரங்களையும் வைத்து தாழ்மையுடனும் அன்புடனும் யூதர்களை பாரபட்சமின்றி வழிநடத்தாமல் பெருமைபட்டக்கொண்ட பரிசேயர்களுக்கு இயேசுவின் செயல் வெறுப்பை கூட்டியிருக்கும்.
இங்கே ஒரு முக்கியமான உண்மையை இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்: கடவுளுடைய சட்டம் மனிதனைச் சுமைப்படுத்துவதற்காக அல்ல; மனிதனுக்கு வாழ்வையும் நன்மையையும் கொடுப்பதற்காக என்பதை மனதில் கொள்ள வேண்டும். பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்தை மட்டும் பார்த்தார்கள். ஆனால் இயேசு அதன் இதயத்தை வெளிப்படுத்தினார். சட்டம் அன்பிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டால், அது மனிதனை கடவுளிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவனைச் சுமைப்படுத்தக்கூடும்.
நாமும் சில நேரங்களில் இப்படித்தான் நடந்து கொள்கிறோம். மற்றவர்களின் தவறுகளை உடனடியாகக் கண்டுபிடிக்கிறோம்; ஆனால் அவர்களின் சூழ்நிலையையும் தேவையையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. “இது சரியா? தவறா?” என்று கேட்பதற்கு முன்பாக, “இது அன்பான செயலா? இது மற்றவருக்கு நன்மை தருமா?” என்று கேட்க இயேசு நம்மை
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது சட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், பிறரை விதிகளால் அல்ல, அன்பாலும் இரக்கத்தாலும் அணுகவும் எனக்கு ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
