சுற்றுச்சூழலுக்கு முகமூடி தேவையா?

கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

கொரோனா தொற்று நோயின் பிடியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் எடுக்கும் சில முன்னெச்சரிக்கையான செயல்கள் தான் முகமூடி, கையுறை, சுத்திகரிக்கும் திரவியம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துதல். கொரோனா தொற்று  காற்றின் மூலமும் பரவும் என்ற செய்து வந்த பிறகு, முகமூடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.  இப்படி உபயோகப்படுத்தும் கையுறை, முகமூடி போன்ற பொருட்களை நம்மில் எத்தனை பேர் சரியான முறையில் அப்புறப்படுத்துகிறோம்? சரியாக அப்புறப்படுத்தாத கையுறை மற்றும் முகமூடியை இருந்து கூட கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நம் பாதுகாப்பிற்காக நாம் செய்யும் செயலினால் மற்றவர் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது.

இந்த முகமூடி மற்றும் கையுறையை உபயோகப்படுத்திய பின்பு எப்படி அதை முறையில் அப்புறப்படுத்தலாம் என்பதை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். 

நாம் நம் குடும்பத்துடன் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணுவது போல, அந்த சிந்தனை மற்றவருக்கும் இருக்கும் என்ற புரிதலோடு, நாம் உபயோகிக்கும் முகமூடி, கையுறை போன்ற பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்துவோம்.  நாமும் வாழலாம், பிறரையும் வாழவிடலாம். 

 

 

Add new comment

1 + 1 =