வாழ்வின் ஆதாரமே!
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி 1994 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றாட வாழ்க்கையில் பொறுப்பான பெற்றோரின் முக்கிய பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
1994 ஆண்டுகளில் சமூகம் முற்றிலும் சுயநலமாகக் கொண்டிருப்பதை உணர்ந்த அப்போதைய அமெரிக்க அதிபர் அதிபர் பில் கிளிண்டன் அவர்கள் ஐ.நாவில் குடும்ப அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியாக பெற்றோர் தினக் கொண்டாட்டத்திற்கான ஒரு காங்கிரஸ் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். அதனடிப்படையிலேயே இத்தினம் உருவானது என்கின்றனர்.
முழு உலகிலும், உலக பெற்றோர் தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரைப் பாராட்டி, அவர்களுக்கு அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் மரியாதை ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதாகும். நம் பெற்றோர் நமக்களித்த தியாகம், வளர்ப்பு, கவனிப்பு மற்றும் அசாதாரண ஆதரவு ஆகியவற்றிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மகிழ்விப்போம்.