தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 13

1. முதல் ஆசிய நோபல் பரிசு அறிவியல் துறையில் மிகப்பெரிய விருதான நோபல் பரிசை,ஆசியாவில் முதல் பெற்றவர் இந்தியரே. அவர் சர்.சி. வி.இராமன்.

2. இந்தியா பற்றிய பழைய நூல் இந்தியா பற்றி மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்ட நூல் 'இண்டிகா.' இதனை எழுதியவர் மெகஸ்தனிஸ். பழங்காலத்தில் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தவர். சிறந்த பழங்கால வரலாற்றுச் சான்று இது.

3. முதல் கிரெடிட் கார்டு 1950-ல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. ப்ராங்க் மெக் நமாரா என்ற தொழில் அதிபர்தான் தொடங்கி வைத்தார். ஒரு சமயம் பணம் எடுக்க மறந்து ஓட்டல் சென்று - பில் கொடுத்ததும் பணமில்லாது தவித்த அனுபவத்தின் தீர்வே இந்த கிரெடிட் கார்டு கண்டுபிடிப்பு.

4. குறட்டை மனிதனைப் போல குறட்டைவிட்டுத் தூங்கும் விலங்கு யானை.

5. பாம்பன் பாலம் ராமேஸ்வரம் - தனுஷ்கோடியை இணைக்கும் பாலம். 1914-ல் கட்டப்பட்டது. 26000 டன் இரும்பு கொண்டு கட்டப்பட்ட இரும்புப்பாலம் இது.

Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.