துணை நீரே

அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.

தொடக்க நூல் 32-10.

யாக்கோபு போகும் போது   அவரிடம் இருந்தது ஒரு கோல் மட்டுமே ஆனால் அவர் திரும்பி வரும்போது ஒரு பெரிய குடும்பமும் , இரண்டு பரிவாரங்களும் உடையவராக திரும்பி வந்தார்.  கடவுள் அந்த அளவில் யாக்கோபை ஆசீர்வதித்தார். அவர் ஆசீர்வதிக்கும் இறைவன்.  நம்மையும் ஆசீர்வதிப்பார் இன்றைய நாளில் நம் கையில் ஒன்றுமில்லை என்று நாம் இருந்தாலும் ,  கடவுள்.  நம் குடும்பம், வேலை, படிப்பு, வாழ்க்கை, எல்லாவற்றையும் ஆசீவதிப்பார். இரண்டு மடங்காக ஆசீர்வதிப்பார். உள்ளம் கலங்க வேண்டாம்.   ஆண்டவரிடத்தில் நம்பிக்கைக் கொள்வோம். அவரே எல்லாவற்றையும் நலமாக  செய்வார்.

 

அன்பு ஆண்டவரே, உமக்கு நன்றி. இந்த நாளில் எங்களோடு  இருந்து , எங்களுடைய படிப்பையும், வேலையையும், குடும்பத்தையும் ,நாங்கள் எடுக்கின்ற முன்னெடுப்புகளையும் ஆசீர்வதியும். அருள்தாரும் . துணை செய்யும்.  பாதுகாத்தருளும்.  ஆமென்

Add new comment

1 + 0 =