உற்று நோக்கு

அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.

எண்ணிக்கை 21-8.

இஸ்ரேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராக முறுமுறுக்கின்றனர்.  ஆண்டவருக்கு கோபம் உண்டாக்கினார்கள்.   எனவே ஆண்டவர் கொள்ளிவாய் பாம்புகளை அனுப்பி அவர்களை கடிக்க வைக்கிறார் . பின்னர் அவர்கள் தங்களை காப்பாற்றும் படி ஆண்டவர்கிட்ட சொல்ல மோசேயிடம் சொல்கிறார்கள்.  அப்பொழுது ஆண்டவர் “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். 

அந்நாளில் அதை உற்று நோக்கியவர்கள் நலம் பெற்றார்கள் . 

இந்நாளில் நமக்காக சிலுவையில் பலியான  இயேசுவை உற்று நோக்கும் அனைவரும் பாவத்திலிருந்து நோயிலிருந்து,  விடுதலை பெறுகிறோம் . மீட்பின் வழியில் நடந்து நிலைவாழ்வுக்கு நம்மை ஆயத்தம் செய்கிறோம் 

சிலுவை அவமானத்தின் சின்னம்  அல்ல . வெற்றியின் சின்னம் . அன்பின் வெளிப்பாடு.  தியாகத்தின் அடையாளம். 

 

ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும். ஆமென்.