அப்பா பிதாவே
"அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.
மாற்கு 14-36.
இது இயேசு பிதாவை நோக்கி, "அப்பா தந்தையே என்றுச் சொல்லி உள்ளம் உருகி ஜெபித்தார்.
நாம் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டுள்ளோம். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.
நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.
நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது.
கடவுள் நம் தந்தை. அவர் நமக்கு நண்மைகளையே செய்வார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இறங்குகிறது போல இறங்குகிறவர். தாயை போல நம்மை அன்பு செய்கிறார். ஒரு நண்பனை போல நம்மை நல்வழி படுத்துவார். எனவே அவரை அப்பா என அழைத்து ஒவ்வொரு நாளும் அவரிடம் நமது உள்ளத்தின் எண்ணங்களை பகிர்வோம். .அவர் நண்மையானதை நமக்கு தருவார்.
ஜெபம் :. அப்பா பிதாவே , அதிகாலையில் உம் பாதம் வந்திருக்கிறோம் . எங்களை உம் சித்தம் போல் நடத்தும். எங்கள். அன்றாட தேவைகளை நிறைவேற்றும். இந்த பொல்லாத உலகில் நாங்கள் பாவத்தில் விழாத படி எங்கள் சிந்தனை, செயல் , வார்த்தைகள், வாழ்வு அனைத்துமே உமக்கு ஏற்றதாக அமையட்டும். எங்களோடு இரும். தூய ஆவியாரே எங்களை ஆட்கொண்டு வழி நடத்தும் ஆமென்.