பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.
மார்க்கோபோலோ சீனா சென்றுவரும் வரை சீனா பற்றியோ, மற்ற ஆசியா நாடுகள் பற்றியோ ஐரோப்பா அதிகம் அறிந்திருக்கவில்லை. கான்ஸ்டாண்டி நோபிளை, துருக்கியர்கள் கைப்பற்றியதால், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு தரைவழி தடுக்கப்பட்டது.
மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு ஆதாரமாகவும் விளங்கிய மார்க்கோ போலோவை நாம் 'பயண நாயகர்' எனலாம்.
பண்டைய கிரேக்கத்திற்கு இணையாக விளங்கியது ரோம். நாகரிகம், இலக்கியம், கலை, ஓவியத்திற்கு புகழ்பெற்றது ரோம் கட்டடக்கலை, சிற்பக்கலையின் பிறப்பிடம் இது. உலக நாகரிகத்திற்கு ரோமின் நன்கொடை மிக மிக அதிகம்.
ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து நிற்கும் நாடு சீனா.
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.
வரலாற்று நாயகர்கள், வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், தங்கள் செயலால், வீரத்தால், சாதனையால், தடம் பதித்த வாழ்வால், இன்றும் நம் மனதில் மறக்க முடியாத மனிதர்களாய் இருக்கிற சில பேரை நாம் பார்க்கிறோம்.