வெற்றியா? தோல்வியா? | ஞா சிங்கராயர் சாமி | VeritasTamil
நம் முயற்சிகள் சில சமயம் தோற்கலாம்.
என்ன கற்று கொண்டோம் என்பதே
வெற்றிக்கான கரு.
கஷ்டப்படாமல் இருக்க
கஷ்டப்பட வேண்டும் என
ஜெர்மனிய பழமொழி உண்டு.
வெற்றிக்காக வெற்றி வரும் வரை உழைப்பை போடுவதே நம் முதல் இலக்கு.
முயற்சிக்கு முட்டுகட்டை எது ?
அயர்ச்சி, சலிப்பு, தன்னம்பிக்கை இன்மை.
ஒவ்வொரு செயலிலும்
வெற்றிக்கான வேரை தேடுவோம்.
பூக்களின் பலனை விட, மறைந்துள்ள வேரை காண முயல்வோம்.
ஒரே துறையில் பெரிதும் கவனம் செலுத்தினால், வெற்றிக்கான யுக்தி, அல்லது வெற்றி கிட்டும் என்பது பல வெற்றியாளர்கள் கருத்து.
தேர்ந்தெடுக்கும் துறை நமக்கு
பிடித்ததாக இருக்க வேண்டும். இல்லையேல் பிடித்ததாக மாற்றி கொள்ளும் மனவலிமை வேண்டும்.
நேசித்தலும், யாசித்தலும், சுவாசித்தலும்
பரமனுக்கு மட்டுமல்ல, வெற்றிக்கும்தான்.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி