சாதனைகள் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

சாதனைகள்
கனவில் கருக்கொண்டு 
விருப்பத்தில் விம்மி முளைத்து 
தொடர் முயற்சியில் தூக்கம் இழந்து 
வியர்வையில் விருட்சமாகி விளையும் நற்கனிகளாகும்!

சாதனைகள்
ஒரு நாளில் நிகழ்வதில்லை; கடின உழைப்பின்றி உருவாவதில்லை;
மிகப்பெரும் விலை கொடுக்க முன்வராவிட்டால் அவை சாத்தியமாவதில்லை!

உன் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தியாகங்களை உணராமல், வெற்றுப் பேச்சினால் வேதனை அளிப்போர் உண்டு. தங்களால் செய்ய முடியாததைப் பிறர் செய்யும்போது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொருமுவோரும் உண்டு. அனைத்தையும் கடந்து போக நீ கற்றுக்கொள்... உன் சாதனைகள் சத்தமாய் பதில் சொல்லும்!

உன்னால் முடியாது என பிறர் நினைப்பதை நீ செய்; 
உன்னால் முடியுமா என நீயே சந்தேகிப்பதையும் நீ செய். 
நீ சாதிக்கப் பிறந்தவன்(ள்) என்பதை நினைவில் கொள்... 
சாதனை உன்னை சரித்திரம் படைக்க வைக்கும்!

தேன் எடுக்கப்படும் போது தேனீக்களால் கொட்டப்படத் தயாராக நீ இருந்தால், 
சாதனையில் எதிர்கொள்ளும் வேதனைகளை முறியடித்து வெற்றி வாகை சூட நீ தயாராவாய்!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.