உழைக்கக் கற்றுக்கொள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.09.2024

உழைக்க கற்றுக் கொண்டவன்
ஊசி முனையின் அளவில் வழி இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வான்.

ஏணியை வைத்தே கொடுத்தாலும்
ஏறத் தெரியாதவன் தான் சோம்பேறி.

வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். வளர்வதற்க்கு எடுத்துக் கொள்வது, உங்கள் கைகளில்.

அதாவது முத்தைப் போன்ற 
பெரும்  சொத்து உண்டா,
சிப்பிக்குள் இருக்கும் முத்து,
பல ஆண்டுகள் காத்திருந்து தான் பிறக்கின்றன‌.

உழைக்கின்ற உழைப்பும் எப்போதும் உரமாகும். நீ உயர்ந்து நிற்க்கும் போது, நல்ல வேராகும்
நீ உழைத்துக் கொண்டே இரு.

உழைத்து கொண்டு இருக்கும் போது நம் திறமையை மற்றவரிடம் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

தன்னம்பிக்கையோடு
செயல்பட்டால் தன்னிகரில்லா
வெற்றி கிடைக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும்  உழைப்பும் விடாமுயற்சியும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி