யாருமில்லாத பொழுதுகள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.07.2024
கை கொடுப்பார்கள் என்று நினைத்தவர்கள் சமயத்தில் கை விட்டார்கள் என்பதற்காகக் கவலைப்படாதே.
உண்மையில் உன்னை நேசிக்கும் மனிதர்களை அறிந்து கொண்டதற்காக சந்தோஷப்படு.
யாருமே கை தரவில்லை என்பதற்காகத் துவண்டு விடாதே.
யாருமில்லாத பொழுதுகள் தான் உன்னை வலிமை மிக்கவனாக மாற்றியிருக்கின்றன.
உறுதியான உன்னை உருவாக்கியிருக்கின்றன
அதற்காக நன்றி சொல்.
உங்களுக்காக மற்றவர்கள் உதவுவார்கள் என்று காத்திருக்காதீர்கள்.
உங்களிடமுள்ள திறமையை முழுமையாக நம்புங்கள்.
அதாவது மரம் செடியாய் இருக்கும் போது ஆடு அதனைக் கடிக்கும்.
அதே செடி மரமானதும் கடித்த ஆடு
அம்மரத்தின் நிழலில் வந்து படுத்து உறங்கும்.
இதன் பெயர் தான் வெற்றி.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து யாரும் இல்லா முதியோர்களுக்கு எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி