பக்குவம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.04.2024

தீப்பெட்டியில்  தீக்குச்சிகள் நிறைய இருக்கும் போது, பற்ற வைக்கும் முறையில் பக்குவம் இருக்காது.

ஒற்றை தீக்குச்சி  மட்டும்  இருந்தால் 
காற்றைக் கூட அடக்கி பற்ற வைக்கும் நிதானம் இருக்கும்.

இது போல் வாழ்வில் சிலவற்றை விரைவில் அடைந்து விடுவோம்.
சிலவற்றை அடைய கால தாமதம் ஆகலாம்.
சிலவற்றை அடைய முடியாமலேயே
கூட ஆகலாம்.

ஆகவே தோற்ற அனுபவங்களை எல்லாம்
நிதானத்தோடு நினைத்துப் பார்.
இது அனைவருக்கும் பொருந்தும்.
அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை.

திறமை இருந்தால் ஒருமுறை வெல்லலாம்.
பொறுமை இருந்தால் ஒவ்வொரு முறையும் வெல்லலாம்.

திறமையோடு கூடிய பொறுமையைக்
கற்றுக் கொள்.

உன்னை வீழ்த்த ஒருவரும் இல்லை இவ்வுலகில்.

முயன்று பாருங்கள் முடியாது என்று எதுவும் இல்லை.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க
                    

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி