செயற்கை நுண்ணறிவை மட்டுமே நம்பாமல், இயேசு கிறிஸ்துவில் வேரூன்றி நிற்க வேண்டும்: ஆயர் மால்கம் செக்வேரா | Veritas Tamil

இந்தியாவின் அமராவதி உரோமை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மால்கம் செக்வேரா அவர்கள், புனித பவுல் கூறும் “இறைவனின் படைக்கலன்களை அணிந்துகொள்ளுங்கள்” என்ற அறிவுரையைச் சுட்டிக்காட்டி, ஆசியக் கத்தோலிக்கத் தகவல் தொடர்புப் பணியாளர்கள் செயற்கை நுண்ணறிவை மட்டுமே நம்பியிருக்காமல், இயேசு கிறிஸ்துவில் வேரூன்றி நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மகாவோவில் உள்ள புனித ஜோஸ் வில்லா சிற்றாலயத்தில், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத் தொடர்பு அலுவலகத்தின் (FABC-OSC) கூட்டத்தின் இரண்டாம் நாள் காலைத் திருப்பலியில் மறையுரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவை நமது படைக்கலனாக மாற்றிக்கொள்ளும் சோதனை உள்ளது. ஆனால், புனித பவுல் இயேசு கிறிஸ்துவில் நம்மை ஒப்படைத்து, அவரில் வேரூன்றி நிற்க அழைக்கிறார். உண்மையில் நிலைத்திருங்கள், செயற்கை நுண்ணறிவு காலத்தில் கிறிஸ்துவை அறிவிக்க இந்த நவீனக் கருவிகளைப் பயன்படுத்தும்போது, எப்போதும் நேர்மையுடனும் நீதியுடனும் செயல்படுங்கள்” என்று ஆயர் செக்வேரா கூறினார்.

இக்காலை நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு ஆயர் செக்வேரா தலைமை தாங்கினார். கிழக்குத் திமோர் நாட்டின் பௌகாவ் மறைமாவட்ட ஆயர் லியாண்ட்ரோ மரியா ஆல்வெஸ் உள்ளிட்ட ஆசிய ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் இத்திருப்பலியில் இணைந்து கொண்டனர்.

அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இக்கூட்டத்தில், ஆசியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்கத் தகவல் தொடர்புப் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். “மகத்தான மானுடம் மற்றும் ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பதற்கான ஒன்றிப்புப் பாதைகள்: செயற்கை நுண்ணறிவு காலத்தில் கிறிஸ்துவைத் தொடர்புகொள்ளுதல்” என்பது இக்கூட்டத்தின் மையக்கருத்தாகும்.

ஆசியாவின் எதிர்காலத் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதன் வளமான மறைப்பணி வரலாற்றையும் இணைத்துப் பேசிய ஆயர் செக்வேரா, மகாவோ மறைமாவட்டம் தனது 450ஆம் ஆண்டு நிறைவை அணுகி வருவதையும் சுட்டிக்காட்டினார். பல நூற்றாண்டுகளாகத் தகவல் தொடர்புக் கருவிகளும் தொழில்நுட்பங்களும் மாறிவந்தாலும், நற்செய்தியின் அடிப்படைச் செய்தி மாறாமல் நிலைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

“கடந்த 2,000 ஆண்டுகளாக, நற்செய்தியை அறிவிப்பதற்காக அந்தந்தக் காலத்தில் இருந்த கருவிகளைத் திருஅவை பயன்படுத்தி வந்துள்ளது. காலம் மாறுகிறது; கருவிகள் மாறுகின்றன; ஆனால், செய்தி என்றென்றும் மாறாமல் நிலைத்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியால் திருஅவையின் தகவல் தொடர்புப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் குழப்பங்களையும் கவலைகளையும் குறிப்பிட்ட ஆயர், அவர்கள் அச்சத்திற்கு ஆளாகக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

நற்செய்தி வாசகத்தைச் சுட்டிக்காட்டிய அவர், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டபோதும் இயேசு அஞ்சாமல் செயல்பட்டதை நினைவுபடுத்தினார். கிறிஸ்துவே செய்தியை அறிவிப்பவராகவும், அறிவிக்கப்படும் செய்தியாகவும் இருக்கிறார் என்று அவர் எடுத்துரைத்தார்.

“உறுதியுடன் இருங்கள். அச்சமின்றி செயல்படுங்கள். பதற்றமடைய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்ட ஆயர் செக்வேரா, தூய ஆவியார் இறைநம்பிக்கையாளர்களுக்கு அனைத்தையும் கற்றுத்தந்து வழிநடத்துவார் என்ற யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின் வாக்குறுதியையும் நினைவுகூர்ந்தார்.

“எல்லா கேள்விகளுக்கும் நம்மிடம் பதில்கள் இல்லை; நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தூய ஆவியார் நமக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசியத் திருஅவை நவீனத் தகவல் தொடர்புத் தளங்களை நம்பிக்கையுடனும் அறநெறியுடனும் பயன்படுத்தி, கிறிஸ்துவை உண்மையாக அறிவிக்கும் டிஜிட்டல் மறைப்பணியாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டும் நோக்கில், இக்கூட்டத்தில் ஆன்மிக உரையாடல்கள், பயிலரங்குகள் மற்றும் ஆழ்ந்த சிந்தனை அமர்வுகள் இடம்பெறுகின்றன.

Tamil Survey Popup Image