சேலத்தில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாபெரும் கிறிஸ்மஸ் விழா பேரணி !| Veritas Tamil


07 டிசம்பர் 2025 அன்று, சேலம் மாவட்டத்தில், சேலம் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு (CSI, கத்தோலிக்க, சுயாதின திருச்சபை பேராயர்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள்  மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள்) இணைந்து நடத்திய மாபெரும் கிறிஸ்துமஸ் விழா பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாகுபாடு இன்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையதின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை சொ. ஜோ அருண் சே. ச. அவர்கள் பேரணியை கொடியசைத்து இனிதே துவக்கி வைத்தார்.

CSI சூசனம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை & சர்க்கரை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இறுதியாக ,இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆணைய தலைவர் அவர்கள், தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு, அரசு எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது எனவும், சிறுபான்மை மக்களின் வாழ்வை மேம்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் அளப்பரியது என்றும் கூறினார்.