சீயோலில் நிறுவப்படவுள்ள புனித கார்லோ அகுதிஸ் நினைவுச்சின்னம் | Veritas Tamil

தென்கொரியாவின் சியோலில் உள்ள ஆலயம் ஒன்றில் புனித கார்லோ அகுதிஸின் (1991-2006) நினைவுச் சின்னங்கள் வைப்பதற்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அம்மறைமாவட்டத் துணை ஆயர் மேதகு ஜோப்கோ தலைமையேற்று மறையுரை வழங்கினார். அப்போது, "உண்மையான மகிழ்ச்சி என்பது தன்னலம் சார்ந்த வாழ்க்கையில் அல்ல; மாறாக, கொண்ட வாழ்க்கையில்தான் மலரும்" எனவும், கடவுளை மையமாகக்
2000-ஆம் ஆண்டின் முதல் புனிதராக அறிவிக்கப்பட்ட புனித கார்லோ அகுதிஸ், நற்செய்தியைப் பரப்புவதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக நினைவுகூரப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.
இன்றைய நற்செய்தி உண்மையான மகிழ்ச்சியைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது என்று கூறிய ஆயர் ஜோப்கோ, மகிழ்ச்சி, செல்வம் என்பது, புகழ், இளமை, ஆரோக்கியம் அல்லது சமூக வெற்றியைப் பொறுத்ததுஎன்று உலகம் நமக்குச் சொல்கிறது என்றும், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் அலைப்பேசிகள், தகவல் தொழில்நுட்பச் செயலிகள் வழியாகப் பெறும் அதிக சந்தோஷங்கள் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தர முடியாது என்றும் கூறினார்.
மேலும், கடவுளுடனான ஆழமான தொடர்பு மற்றும் நீடித்த மகிழ்ச்சிக்கான ஒரே பாதை புனிதத்துவ வாழ்வு என்பதைக் கூறிய அவர். நாம் ஒவ்வொருவரும் நமது தனித்துவமான பாதையில் புனிதத்திற்கு அழைக்கப்படுகிறோம்" என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார். ஒருவர் மற்றவரை பின்பற்றுவதன் வழியாக அல்ல; மாறாக, கடவுள் நமக்கு வழங்கிய பரிசுகளை உண்மையாக வாழ்வதன் வழியாக நாம் புனிதத்துவ வாழ்க்கை வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
Daily Program
