“பசுமைப் பயணம்" - கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை நோக்கி பயணமானது நேற்று தொடங்கியது. | Veritas Tamil
இயற்கையைக் காப்போம் வாழ்வுரிமையை மீட்போம் என்ற நிலைப்பாட்டை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 780 கிலோமீட்டர் பயணத்தைக் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை நோக்கி பயணமானது நேற்று தொடங்கியது.
பசுமை பயணத்தின் முதல் நாளில் மிதிவண்டி பயணம் தொடக்க நிகழ்வாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் காந்தி மண்டபத்தின் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இயற்கையைக் காப்போம் வாழ்வுரிமை மீட்போம் என்ற விருதுவாக்கோடு பசுமைப் பயணம் தொடங்கியது.இதில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் திரு.குமரி ஸ்டீபன் அவர்கள் தலைமைத் தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். களரி குழுவினரின் பறை இசையோடு விழிப்புணர்வு பசுமைப்பணம் தொடங்கியது.

கோட்டாறு மறைமாவட்டத் துறவியர் பேரவைத் தலைவர் அருட்பணி பிரிட்டோ பீட்டர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழகத் துறவியர் பேரவைத் தலைவர் அருட்சகோதரி.மரிய பிலோ அவர்கள் அறிமுக உரையாற்றினார். இயற்கை பற்றிய இளம் மாணவர்களின் பார்வை என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பள்ளி மாணவர்களின் பழங்குடியினர் அணிவகுப்பு நடைபெற்றது. இயற்கையைக் காப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி நகராட்சித் தலைவர் திரு. குமரி ஸ்டீபன் அவர்கள் பேசினார்.
இயற்கையைக் காக்க இயக்கமாவோம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி வட்டார முதன்மைப் பணியாளர் அருட்பணியாளர் ஜான்சன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.
களரி குழுவினரின் இயற்கையை காப்போம் கருத்துருவில் விழிப்புணர்வு பாடல் பாடினர். கோட்டாறு குழித்துரை மறை மாவட்ட துறவியர் அனைவரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கொடியைசைத்து மிதிவண்டி பயணத்தைத் துவக்கி வைத்தனர்
12.30 மணியளவில் நாகர்கோவிலில் வடசேரி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவில் வந்த பசுமைப்பயண மிதிவண்டி விழிப்புணர்வாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
களரி குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு நிகழ்ச்சித் தொடங்கியது.
அருட்சகோதரி.கலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு துறவியர் பேரவைத் தலைவர் அருட்சகோதரி மரிய பிலோ அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார்கள்.இயற்கை அன்னையைக் காப்போம் என்ற தலைப்பில் மாநகராட்சி துணைமேயர் திருமதி.மேரி பிரின்சி லதா அவர்கள் இயற்கை நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

பறையிசையோடு மீண்டும் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் தொடர்ந்தது.பசுமைப் பயணம் தொழர்கள் அனைவரும் 05.00 மணி அளவில் திருநெல்வேலி வந்து அடைந்தனர் அதை தொடர்ந்து இதய ஜோதி கல்லூரியில் மரம் நடுதல் நிகழ்ச்சியானது துவங்கியது இதில் அருள் சகோதரிகள் மற்றும் பசுமை பயணத்தின் வீரர்கள் அனைவரையும் ஆரத்தி எடுத்து மாணவர்கள் அனைவரும் வரவேற்றனர்.
திருநெல்வேலியை சேர்ந்த TNCRI உறுப்பினர்கள்,கல்லூரி மாணவிகள் மற்றும் பசுமை பயணத் தோழர்கள் அனைவரும் இணைந்து மரங்களை நட்டனர் முதல் நாள் பயணமானது வெற்றிகரமாக முடிந்தது. இயற்கையை காக்க தொடரும் பசுமை பயணம் இன்று தூத்துக்குடியை நோக்கி......