1.கோவிலில் தேசீயக்கொடி சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாளில் தேசீயக்கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது வழக்கம். தேசீயக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, மேளதாளத்துடன், பிரதான கோபுரத்திற்கு எடுத்து வரப் பட்டு,தீட்சிதர் ஒருவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகஸ்ட் 15-ல் ஏற்றப் படுகிறது. இதுபோல் வேறு கோவில் களில் கொடி ஏற்றப்படுவதில்லை.+
1.வித்தியாசமான தெய்வங்கள் இந்தியாவில் நீண்ட காலமா கவே பறவை- பாம்பு வழிபாடு உண்டு. இதுபோல பண்டைய எகிப் தில் பூனையை புனிதமாகக் தெய்வமாக வழி பட்டனர். பூனைக்கு கோவில்கூட கட்டப்பட்ட தாம். அதோடு பூனையைக் கொல்வோருக்கு கடுமை யான தண்டனை வழங்கப்பட்டதாம்.அதுபோலவே பண்டைய எகிப்தில் முதலையை தெய்வமாக வழிபட்ட பழக்கமும் இருந்தது.விலங்குகள் மீது ஏற்பட்ட பாசம் மட்டுமல்ல. பயமும் வழிபாட்டிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஒவ்வொரு நாடும் தேசீய நாள் - சுதந்திர நாள் விடுதலை நாள் எனக் கொண்டாடும். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் எனக் கொண்டாடுவதை அறி வோம். ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சீனப்புரட்சி நாள் அந்த நாடுகள் தேசீய தினமாகும் இப்படி தேசீய தினமே இல்லாத நாடு இங்கிலாந்து - மற்றது போப் ஆண்டவர் வாழும் வாடிகன் நாடு.
மிகப் பழங்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்த வரும், பல நாடுகளைக் கண்டவரும், பல வரலாற்றுக் குறிப்புகளுக்கு ஆதாரமாகவும் விளங்கிய மார்க்கோ போலோவை நாம் 'பயண நாயகர்' எனலாம்.
பண்டைய கிரேக்கத்திற்கு இணையாக விளங்கியது ரோம். நாகரிகம், இலக்கியம், கலை, ஓவியத்திற்கு புகழ்பெற்றது ரோம் கட்டடக்கலை, சிற்பக்கலையின் பிறப்பிடம் இது. உலக நாகரிகத்திற்கு ரோமின் நன்கொடை மிக மிக அதிகம்.
ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து நிற்கும் நாடு சீனா.
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.
வரலாற்று நாயகர்கள், வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், தங்கள் செயலால், வீரத்தால், சாதனையால், தடம் பதித்த வாழ்வால், இன்றும் நம் மனதில் மறக்க முடியாத மனிதர்களாய் இருக்கிற சில பேரை நாம் பார்க்கிறோம்.