வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024
வாழ்க்கை என்பது என்ன
உங்களுக்குள் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பது என்ன
உயிரோடு இருப்பதா?
மகிழ்ச்சியாக இருப்பதா?
பணம், புகழைத் தேடி தலைதெறிக்க ஓடுவதா?
தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா.?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும்,
பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும்.
சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது.
காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது.
முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை.
அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.
சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்.
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியை செய்து கொண்டிருக்கிறது.
நாமும் நம் பணியை சரியாக செய்தால் வெற்றி நிச்சயம் .
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
இனிய இரவு வணக்கம்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி