நேரம் பொன்னானது ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.08.2024

நம் வேலையைத் தள்ளிப் போடாதீர்கள்.
சில நிமிடம் தானே என்று உங்கள் நிமிடங்கள் வீணாவதை அலட்சியம் செய்யாதீர்கள்.
நிமிடங்களை வீணாக்குவது என்பது நம்மை நாம் சிறிது சிறிதாக வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள். நிமிடங்கள் தாம் யுகங்களாக மாறுகின்றன.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலை மதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும்.
உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காது நேரங்கள், நல்ல வாய்ப்புகள், இவைகள்
எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம்.
இந்தக் காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரம் இருக்கிறதே அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது இழக்கக் கூடாதது.
ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் உறவுகளையும் உடைமைகளையும் வாழ்வை இழந்து தவிக்கும் எம் கேரள வயநாடு மக்களுக்கு எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
