மதங்களுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ்
செப்டம்பர் 4 ஆம் தேதி ஜகார்த்தாவில் உள்ள இஸ்தானா நெகாரா ஜனாதிபதி மாளிகையில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், பரஸ்பர மரியாதையை வளர்ப்பதில் மதங்களுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்தோனேசியாவின் அதிகாரிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை,
இந்தோனேசியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளை கடல் எவ்வாறு இணைக்கிறது என்பதற்கு இணையாக, இந்தோனேசியாவின் பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களின் பங்கை தேசத்தின் "ஒருங்கிணைக்கும் துணி" என அவர் எடுத்துரைத்தார்.
"உங்கள் தேசிய முழக்கம், பின்னேகா துங்கல் இக்கா (வேற்றுமையில் ஒற்றுமை, அதாவது 'பல ஆனால் ஒன்று'), பலதரப்பட்ட மக்கள் ஒரே தேசத்தில் உறுதியாக ஒன்றுபட்டிருப்பதன் பன்முக தன்மையை அழகாக பிரதிபலிக்கிறது," என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கலாச்சார மற்றும் கருத்தியல் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்தும் மதிப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான சமநிலையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், இந்தோனேசியாவில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையில் "அமைதியான மற்றும் பலனளிக்கும் நல்லிணக்கத்தை" மேம்படுத்துவதற்கு, மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஆதரிப்பதில் கத்தோலிக்க திருச்சபையின் உறுதிப்பாட்டை திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்துள்ளார்.
"கத்தோலிக்க திருச்சபை பொது நலனுக்காக சேவை செய்கிறது மற்றும் பொது நிறுவனங்கள்,மிகவும் சமமான மற்றும் சமச்சீர் சமூக கட்டமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மேலும் சமூக உதவியை மிகவும் பயனுள்ள மற்றும் நியாயமான நோக்கத்திற்கான உத்தரவாதம் அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மரியாதைக்கான புத்தகத்தில் இத்தாலிய மொழியில் எழுதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த நிலத்தின் அழகில் மூழ்கி, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் உரையாடல் இடமாக திகழ்கிறது என்றும் இந்தோனேசிய மக்கள் நம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தில் வளர தனது வாழ்த்து மற்றும் ஆசீர்வாதத்தையும் அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.