ஒருவருக்கொருவர் திறந்த இதயம் கொண்டவர்களாக வாழ்வோம் - திருத்தந்தை பிரான்சிஸ்
டிசம்பர் 16 திங்கள்கிழமை வத்திக்கானில் உலக மெத்தடிஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் 6 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கத்தோலிக்க சமூகத்தோடு இணைந்து அறிவு, புரிதல், பரஸ்பர அன்பு, போன்றவற்றில் முன்னேறி உறவை ஆழப்படுத்தி வருவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த திருத்தந்தை,ஒருவர் மற்றவருக்காக இதயத்தைத் திறந்துகொள்ளும்போது நமக்குள் இருக்கும் உறவு நெருக்கமாகின்றது என்றும், நம்மை அமைதிப்படுத்தும் இதயத்தின் பணி அது என்பதைக் கண்டறியச் செய்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளாகிய இயேசுவின் இதயம் நமது இதயத்தைத் தொடும்போது, அவர் நம்மை மாற்றுகிறார் என்றும், இவ்வாறாக நமது சமூகங்கள் தங்களுடைய வித்தியாசமான அறிவாற்றல்களையும் விருப்பங்களையும் ஒருங்கிணைத்து ஒரே கடவுளின் பிள்ளைகளாக உடன்சகோதரர்களாக தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகின்றன என்றும் இயேசுவின் இதயத்தை நோக்கிய நமது பயணத்தை நாம் தொடர வேண்டும், இதன்வழியாக ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளவும், இறையரசின் பணிக்கு நம்மைக் கையளிக்கவும் கற்றுக்கொள்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், முதல் கிறிஸ்தவ ஒன்றிப்பு சங்கமாகிய நிசேயா பொதுச்சங்கம் தொடங்கி ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளைக் கொண்டாட இருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகில் கடவுளின் உடனிருப்பிற்கு சான்றளிக்கும் எதிர்நோக்கின் அறிகுறிகளை வழங்குவதற்கான பொறுப்பு நமக்கும் இருக்கிறது என்பதை இந்த ஆண்டு நினைவுபடுத்துகிறது என்றும், நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கும்படி என்ற இயேசுவின் விருப்பத்திற்கேற்ப, அனைத்து தலத்திரு அவை மற்றும் திருஅவை சமூகங்கள் ஒற்றுமையை நோக்கிய பாதையில் தொடர்வதற்கான ஓர் அழைப்பு யூபிலி ஆண்டு என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.