உக்ரேனிய இளையோருடன் திருத்தந்தை || வேரித்தாஸ் செய்திகள்
உலக இளையோர் தினத்தில் உக்ரேனிய இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைனுக்காக மனமுருகி மன்றாடினார்.
2023 ஆகஸ்ட் 2 ஆம் தேதி (வியாழன்) உக்ரேனியாவை சேர்ந்த 15 இளையோர்களை தனிப்பட்ட முறையில் திருத்தந்தை அவர்கள் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களோடு பிரார்த்தனை செய்தார்.
உக்ரைனில் உள்ள இளையோருக்கு தனது உள்ளார்ந்த அன்பினை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கும் அவர்களின் போராட்ட நிகழ்வுகளை கேட்ட திருத்தந்தை அவர்கள் அவர்களிடம் தனது அன்பின் நெருக்கத்தை வெளிப்படுத்தி அவர்களோடு தந்தையின் அன்போடும் அளவில்லாத பாசத்தோடும் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி அவர்களின் துக்கமும் கண்ணீரும் விரைவில் மாறும் என்ற புது நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தார். உக்ரைன் இளையோருடன் அரை மணி நேரம் செலவிட்ட திருத்தந்தை இறுதியில் அவர்களுக்கு ஆசி வழங்கி தனது ஆழமான அன்பினை வெளிப்படுத்தினார்
திருத்தந்தை அவர்களுடன் அரை மணி நேர சந்திப்பின் முடிவில் திருத்தத்தை அவர்கள் விண்ணக தந்தையின் ஜெபத்தினை ஜெபித்து உக்ரைன் போரினால் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் அந்த ஜெபங்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
நம் திருத்தந்தை அவர்கள் உக்ரைனில் அமைதி மற்றும் போரை நிறுத்துமாறு பலமுறை அமைதி பேச்சு வார்த்தைக்கும் போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் அவரது அமைதித் தூதுவர் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
பிப்ரவரி 20, 2014 அன்று ரஷ்யா படைகளை அனுப்பி உக்ரேனிய நகரங்களைத் தாக்கி கைப்பற்றத் தொடங்கிய பின்னர் தற்போது நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரேனியப் போர் வெடித்தது.
2023ஆம் ஆண்டு உலக இளைஞர் தினத்திற்காக, போர்ச்சுகலின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகரமான லிஸ்பனில் திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்துள்ளார். லிஸ்பனில் நடைபெறும் கத்தோலிக்க திருவிழாவில் "மரியாள் எழுந்து விரைந்து சென்றார்" என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு இந்த உலக இளையோர் தினம் கொண்டாடப்பட்டது.
_அருள்பணி வி.ஜான்சன் SdC
(Source from RVA English News)