நாம் உயிர்வாழ அவசியம் - சகோதரத்துவம் | Veritas Tamil

நம்பிக்கையாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, "சகோதரத்துவம் என்பது நமது வாழ்வில் வெளிப்படும் ஆழமான மனிதாபிமானம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய போர்கள், பதட்டங்கள் மற்றும் மோதல்கள் சகோதரத்துவத்தைக் கடினமாக்கினாலும், அது இல்லாமல், நாம் உயிர்வாழவோ, வளரவோ அல்லது கற்றுக்கொள்ளவோ ஒருபோதும் முடியாது" எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கனவு சகோதரத்துவம் என்பது சாத்தியமற்ற அல்ல; மாறாக, மனிதர்களாகிய நாம் மற்றவர்களுடன் உறவுகளையும் பிணைப்புகளையும் உருவாக்கும்
திறனைக் கொண்டுள்ளோம்; ஆகவே, நாம் இணைந்து ஒன்றாக வாழும்போது, நமது மனிதநேயம் சிறந்த முறையில் வெளிப்படுகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார், மேலும், "சகோதரத்துவத்தை வெல்ல முயற்சிக்கும் நோய்களுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க, நாம் பலப்படுத்தப்படக்கூடிய மூலத்தை நோக்கி, அதாவது கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 'சகோதரத்துவம் என்பது கவனித்தல், இதயத்தில் இருத்தல், ஆதரித்தல் மற்றும் நிலைநிறுத்துதல் என்று பொருள்படும் ஒரு மூலத்திலிருந்து வருகிறது. அதாவது, பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஒரே குடும்பத்திற்குள் இருந்தாலும் யாவரும் சகோதர சகோதரிகளே! அதுபோலவே, அவர்கள் யாராக இருந்தாலும், அனைவரையும் ஒரே நிலைக்கு உயர்த்தி, அவர்களின் பொதுவான மாண்பினை அங்கீகரிக்கவேண்டும்: கிறிஸ்து நம்மை நேசித்தது போல் 

இறுதியாக ,நாம் ஒருவரையொருவர் நேசிக்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட சகோதரத்துவம்...சுயநலம் பிரிவினை மற்றும் ஆணவம் ஆகியவற்றின் எதிர்மறையான தர்க்கத்திலிருந்து நம்மை விடுவித்து, ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும் அன்பு மற்றும் நம்பிக்கையின் பெயரில், நமக்குரிய பணிகளை அது நமக்கு மீட்டெடுக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Daily Program

Livesteam thumbnail