நிறைவடைந்தது பசுமைப் பயணம் ! | Veritas Tamil
தமிழ்நாடு துறவியர் பேரவை, அய்க்கஃப் இயக்கத்துடன் இணைந்து முன்னெடுத்த 15 நாள் மிதிவண்டிப் பயணம் நவம்பர் 20 சென்னையில் நிறைவடைந்துள்ளது.மேலும் பசுமைப் பயண இயக்கம் தொடங்கியது .
பசுமைப் பயணத்தின் இறுதி நாளான நவம்பர் 20 அன்று காலை 7: 40 மணியளவில் லயோலா கல்லூரி வளாகத்தில் விடுதியில் உள்ள அரங்கத்தில் ஒரு சிறிய விழாவில் பசுமை பயண வீரர்கள் அனைவரையும் சிறப்பித்தனர்.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பசுமைப் பயண வீரர்கள் அனைவரும் தங்களது மிதிவண்டிகளை குட் ஷெப்பர்ட் பள்ளியை நோக்கி சென்று அங்கு ஒரு விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டு பசுமைப் பயண வீரர்களை சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேரி கல்லூரியை நோக்கி பயணித்தார்கள். அங்கு மரக்கன்றுகளானது நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9:40 மணியளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தனர். அங்கு 11:30 மணி அளவில் பசுமை பயணத்தில் நிறைவு விழாவானது தொடங்கப்பட்டது.

அதில் இறைவணக்க பாடல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தானது பான் செக்கர்ஸ் குழுமத்தில் உள்ளவர்களால் பாடப்பட்டது. இந்நிகழ்வில் வரவேற்புரை அருட் சகோதரி பபி லினெட் FBS அவர்களால் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பசுமைப் பயணத்தின் நோக்க உரையை அருட் சகோதரி மரிய பிலோமினாள் அவர்கள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பசுமைப் படை வீரர்களை சிறப்பு செய்து தலைமை உரையை ஆற்றினார். இதன் பிறகு பசுமை பயணத்தின் அனுபவத்தை அருள்தந்தை பார்த்தசாரதி அவர்கள் பகிர்ந்தார்.மேலும் தமிழக துறவியர் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்து பிரதியை சமர்ப்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அனைத்தையும் அருள் சகோதரி பவுலின் ஆக்னேஸ் FBS அவர்கள் முன் வைத்தார். அங்கு இருந்த மாணவர்களால் மௌன நாடகம் மற்றும் ஒரு விழிப்புணர்வு பாடல் ஆனது பாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆசி உரையை மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் கருப்பொருள் உரையை சுல்தான் அஹமத் இஸ்மாயில் மாநில திட்ட குழு உறுப்பினர் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். இதன் பின்பு வாழ்த்துறையானது முனைவர் இனிகோ இருதயராஜ் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள். இதனை அடுத்து பசுமைப் பயணம் உறுதிமொழியானது அருட் சகோதரி ஆரோக்கியம் FSJ அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக ,இந்நிகழ்வில் நன்றியுறையை அருட்சகோதரி நம்பிக்கை மேரி SAB தமிழக துறவியர் பேரவையின் செயலர் அவர்கள் வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இப்பயணத்தின் இறுதியாக நாட்டுப்பண் பாடல் ஆனது சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் பாடப்பட்டது.
பசுமை பயணம் பசுமைப் பயண இயக்கமாக இனிதே துவங்குகிறது. இது முடிவல்ல தொடக்கம்.