சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது | Veritas Tamil
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது
குமரி பேராசிரியை சாதனை!
கொல்கத்தா, அக். 29: இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இவ்விழாவில் திருநெல்வேலி புனித சவேரியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை விமலா அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருதை, அதன் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பவர்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு 21 மொழிகளிலிருந்து பல்வேறு நூல்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில், மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய "எண்ட ஆண்கள்" என்ற வரலாற்று நூலைத் தழுவி "எனது ஆண்கள்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருந்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியை விமலா அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியை விமலா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈஞ்சக்கோடு ஊரைச் சேர்ந்தவர். தொலைதூரக் கல்வி வாயிலாகத் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு மேற்படிப்பையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தவர். சில ஆண்டுகளுக்குப்பிறகு, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் இந்த இரண்டு பட்டங்களையும் பெற்றவர். தற்போது பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
பேராசிரியை முனைவர் ப. விமலா திருநெல்வேலியில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ப் படைப்பிலக்கியம் மற்றும் மொழியியல் துறையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்திய மொழிகளுக்கு இடையே இலக்கியப் பாலத்தை உருவாக்கும் வகையில் அவர் மேற்கொண்ட இந்த மொழிபெயர்ப்புப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.
முனைவர் விமலாவுக்கு இந்த உயரிய விருது கிடைத்தமைக்காகத் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியை முனைவர்ப விமலா அவர்களுக்கு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்ட நூல் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
நூலின் பெயர் (மொழிபெயர்ப்புக்காக)
தமிழில் மொழிபெயர்த்த நூல் * *எனது ஆண்கள் (Enatu Aangal)
மூல நூல் (மலையாளம்) * *என்டே ஆணுங்கள் (Ente Aanungal)
*மூல ஆசிரியர் * * நளினி ஜமீலா (Nalini Jameela)
*நூல் குறித்த கூடுதல் தகவல்கள் *
*இது மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலாவின் சுயசரிதை (Autobiography) நூல் ஆகும்.
*இவர் சமூக ஆர்வலர் ஆவார். அவரது சுயசரிதை, ஒரு ஆணாதிக்க சமூகத்தில் அவர் வாழ்ந்த அனுபவங்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் விவரிக்கும் சக்திவாய்ந்த ஆவணமாகும்.
இந்த மலையாள நூலைத் திறம்பட "எனது ஆண்கள் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்ததற்காக முனைவர் ப. விமலாவுக்கு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது
இந்த விருது குறித்து "நம் வாழ்வு" மின்னஞ்சல் நாளிதழுக்குத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பேராசிரியை விமலா, இவ்விருதைத் தன் அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். மேலும், இன்றைய காலத்தில் பொதுமக்கள் அனைவரும் மொழிப்பற்று கொண்டிருக்கவேண்டும் எனவும், புத்தகம் படிக்கும் பழக்கம் அவர்களின் வாழ்கையைச் செம்மையாக்கும் எனவும் அறிவுறுத்தினார்.
செய்தி குறிப்பு,
"நம் வாழ்வு" மின்னஞ்சல் நாளிதல்.