தாய் சொல்லைத் தட்டாதே | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

இந்தியத் தேசத்தந்தை என்று புகழப்படும் மகாத்மா காந்தி அவர்கள், எளிமையைக் கற்றது, அவரின் அம்மா புத்திலிபாய் அவர்களின் வளர்ப்பினில். காந்திஜி அவர்கள், அமைதியை விரும்பியதற்குக் காரணம். அவரின் அம்மாதான்.

புத்திலிபாய் அவர்கள், மிகுந்த கடவுள் பக்தி உடையவர். தன் குழந்தைகளும் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டிருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். மிகவும் எளிமையான வாழ்க்கையையே விரும்பிய புத்திலிபாய் அவர்கள், நகைகளுக்கோ, ஆடை அலங்காரத்துக்கோ ஆசைப்பட்டதே இல்லை. காந்திஜி அவர்கள், சட்டம் படிக்க இங்கிலாந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவேளையில், அவரின் அம்மா அவரிடம், "வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தயக்கமாக இருக்கிறது" என்றார். உடனே காந்திஜி அவர்கள், மது அருந்த மாட்டேன், மாமிசம் உண்ண மாட்டேன், பெண்களைத் தீண்ட மாட்டேன் ஆகிய, மூன்று சத்தியங்களை, அம்மா புத்திலிபாய். அவர்களுக்குச் செய்துகொடுத்தார்.

'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற பழமொழிக்கு ஏற்ப, அந்த மூன்று சத்தியங்களையும் கடைசிவரை தவறாமல் கடைப்பிடித்தார் காந்திஜி.

நீங்கள் உங்கள் தாயைப் பார்க்கும்போது,

உங்களுக்குத் தெரிந்த தூய்மையான அன்பைப் பார்க்கிறீர்கள்.

"ஈன்ற தாயிற்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை."

-நான்மணிக்கடிகை