யோகா தினம் | Veritas Tamil

டெல்லியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் மதத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜூன் 21 அன்று டெல்லி செங்கோட்டையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதில் பல்வேறு மதத் தலைவர்கள் பங்கேற்றனர். இதன் கருப்பொருள் "ஒரு பூமி ஒரு யோகா" என்பதாகும். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மதங்களுக்கு இடையேயான தலைவர்கள் தங்கள் மத மரபுகளின் கண்ணோட்டத்தில் யோகாவின் கருப்பொருளைப் பற்றியும் பேசினர். நற்செய்தி தூதுவர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை  நோர்பர்ட் ஹெர்மன் கிறிஸ்தவ சமூகத்தைப் பிரதிநிதியாக பங்கேற்று  யோகா மற்றும் விவிலயம் பற்றிய சிந்தனைகளை வழங்கி கூட்டத்தை வளப்படுத்தினார்.

ஹெர்மன் இந்தியாவின் டெல்லி மறைமாவட்டத்தில் பல்சமய மதங்களுக்கு இடையேயான உரையாடலின் முன்னணி ஊக்குவிப்பாளர்களில் ஒருவர்.

இந்த நிகழ்வுஇ பிரம்மா குமாரிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் கல்விஇ ஆராய்ச்சி மற்றும் பரப்புதலுக்குப் பொறுப்பான இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்துஇ ஜூன் 21 ஆம் தேதி உலகளவில் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகளாவிய ஆரோக்கியம்இ நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஊக்குவிக்கிறது

Tamil Survey Popup Image