sea

  • உலக பெருங்கடல் நாள்| June 8

    Jun 08, 2022
    உலக பெருங்கடல் நாள்
    உலகப் பெருங்கடல்கள் நாள் (றுழசடன ழுஉநயளெ னுயல) ஆண்டுதோறும் சூன் 8 தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
  • நீரின்றி அமையாது உலகு

    Mar 22, 2022
    1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் நாள் உலக நீர்வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
  • சிறுதீவுகளும் காலநிலைப் பிறழ்வும் | Island

    Nov 12, 2021
    “நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற துவாலுத் தீவு நாட்டு அதிபரின் உருக்கமான வேண்டுகோளுக்கு அச்சபையோர் செவிமடுக்கவில்லை. அது ஐநாவின் காலநிலை மாற்ற மாநாட்டுச் சபை. துவாலுத் தீவைப் போன்றே பூவுலகில் உள்ள அனைத்துக் குட்டித்தீவுகளும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் தீவுகள். இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல.
  • பெருங்கடல் பாக்டீரியா - வளிமண்டலத்தில் கார்பன் | Bacteria

    Apr 15, 2021
    மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, ஆழ்கடல் பாக்டீரியாக்கள் கார்பன் கொண்ட பாறைகளைக் கரைத்து, அதிகப்படியான கார்பனை கடல் மற்றும் வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் புவி வெப்பமடைதலின் முக்கிய இயக்கி பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை சிறப்பாக மதிப்பிட விஞ்ஞானிகளை அனுமதிக்கும்.