உழைப்பின் சுவை இனிப்பு! | Maridhivyadas
ஒருவேளை சோறு தின்னாலும் உழைச்சிதான் திங்கணும். அப்பதான் அது உடம்பிலே ஒட்டுமின்னு என் மகன் சொல்றான்"
"கரெக்ட்... வாஸ்தவமான பேச்சாங்க "
அட.. அவன் என்னை சொல்றான்யா!"
தொழிலாளர் தினம்: தொழிலாளி என்றால் ஒரு தொழிலை ஆள்பவன். அதாவது தொழிலை ஆளப்பிறந்தவன். ஒரு தொழிலை தன் திறமையால் தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வருபவன்தாங்க உண்மையான தொழிலாளி. கடவுள் உலகில் அனைத்தையும் படைத்தபின் அதை மனிதனின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து "மனிதா, நீ எல்லாவற்றையும் ஆண்டு அனுபவி” என்கிறார். இப்படி எஜமானாக இருந்த மனிதன் உழைக்கும் தொழிலாளி ஆன கதை என்னங்க?
கடவுள் மனிதனிடம் "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு விலக்கப்பட்ட மரத்தின் கனியை நீ உண்டதால், உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது. ஆகவே உன் வாழ்நாள் எல்லாம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ நீ வருந்தி உழைத்து உண்பாய்..." என்று சொன்னதாக நற்செய்தியில் நாம் வாசிக் கிறோமுங்க. மனிதனுக்கு இது தேவையாங்க......? ஆணும், பெண்ணும் சோடி போட்டோமா, சிங்காரத் தோட்டத்தைச் சுத்தி வந்தோமா... சோறு தின்னோமா. சொகுசா சொக்கட்டான் ஆடினோமா... என்று இல்லாம என்ன ஆப்பிள் பழம் வேண்டி கிடக்குங்க!!!!!
எல்லா மனிதரும் உழைப்புக்கே படைக்கப்பட்டு இருக்கிறார்கள், தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த நாள் முதல் இறக்கும் வரை ஆதாமின் மக்கள் மீது வலிய நுகம் சுமத்தப்பட்டு இருக்கிறது (சீராக் 40:7). ஆக. உழைப்பு மனிதனுக்கு இப்படித்தாங்க ஆரம்பிச்சது.
தொழில் என்று சொல்லும்போது அதுல ஓர் ஒசந்த தொழில் நம்ம வயித்துக்குச் சோறு தருகிற விவசாய தொழில்தாங்க. முதலாளி, தொழிலாளி எல்லாமே விவசாயிதாங்க. ஏன்னா குறைந்தபட்சம் அவரால எத்தனைப் பேருக்கு வேலை தர முடியுமோ அத்தனைப் பேருக்கு வேலை தருகிற ஓனர் அவர்தாங்க. முதலாளி கம் தொழிலாளி.... டூ இன் ஒன்..
இப்ப தொழில் என்றால் மண்வெட்டியை புடிச்சி வெட்டி கொத்துறது மட்டும் வேலை இல்லீங்க. ஒரு வேலைக்காக யோசனை பண்ணி தன்னோட மூளையை கசக்குறதுகூட உழைப்புதாங்க. இயேசு காடு கரை சுத்தி போதிச்சாரே, அது அவரோட உழைப்புங்க. ஓர் ஆசிரியர் புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது அவங்க ளோட உழைப்புங்க. ஒரு டாக்டர் நாடி பார்த்து நோயாளிக்கு மருந்து மாத்திரை எழுதி தர்றாருண்ணா, அதுதாங்க அவரோட தொழில். இப்படி நடனக் கலைஞர்கள் ஆடுறது சிங்கர்ஸ் - பாடுறது. நடிகர்கள் நடிக்கிறது, எழுத்தாளர் எழுதுறது, தையல் கலைஞர்கள் தைக்கி இவை எல்லாமே ஒவ்வொருத்தரோட ஒவ்வொரு மாதிரியான உழைப்புதாங்க. இவ்வளவுதாங்க! தாயின் வயிற்றில் இருந்து பிறந்த சிசு காலையும் கையையும் உதைச்சிகிட்டு அழுகிறத பாருங்க. அதுகூட கடவுள் அதுக்குக் குடுத்த வேலைதாங்க. கச்சிதமா அதை செய்யு துங்க பாருங்க..... சூப்பருங்க
ஒருத்தர் உழைத்த உழைப்புக்கு பரிசுன்னா அது சம்பளம்தாங்க, ஒரு தொழி லைச் செய்து முடிப்பவன் தனக்குள்ள கூலிக்கு உரிமை உள்ளவன்ங்க. அது ஐந்து ரூபாயா இருந்தாலும் சரி, ஐம்பது ஆயிர மாக இருந்தாலும் சரிதாங்க. இப்ப நாம ஒரு வேலையைச் செய்து, அதுக்குச் சம்பளமாக எதுவாக இருந்தாலும் அது பெரிய, சிறிய தொகையாக இருந்தாலும், முதன் முதலா நம் கையில் வாங்குறோம் பாருங்க அட.. அட.. அந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் எடுத்துச்சொல்ல வார்த்தைகளே இல்லீங்க. வாழ்க்கையில் எல்லாருக்கும் அந்தக் கொடுப்பினை கிடைச்சுதோ என்னங்க? அதனால் அந்த நேரத்துல ஒரு கணம் நன்றியோடு கடவுளையோ, நம் தாய் தகப்பனையோ அல்லது நாம் அந்த நிலைக்கு வர உதவி செய்த நம் வெல்விஷரையோ நினைக்கனுமுங்க. அதுதாங்க ஒரு நல்ல மனிதனுக்கு அழகு
தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருந்தக் கூலி தரும் அப்படிங்கறாங்க. ஆக உடலை வருத்தி உழைத்தால்தாங்க கூலி. அப்படியும் சிலருக்கு கிடைக்க மாட்டேங்குது. மனிதன் ரெண்டும். ரெண்டும் நாலுன்னு கணக்குப் போட்டா, கடவுள் ஒண்ணே காலும், இரண்டே முக்கலும் நாலுன்னு கணக்குப் போடுறாருங்க. ஆக கூட்டி விடை ஒண்ணு தாங்க. வழிமுறைகள் தாங்க வேறு வேறு. தன் முதல் புதுமையாக ஆறு கல் ஜாடிகளில் இருந்த தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய கடவுளுக்கு தண்ணீரே - இல்லாம அந்த ஜாடிகளில் திராட்சை ரசம் படைக்கத் தெரியாதா? சொல்லுங்க
ஒருத்தர் உழைத்து சம்பாதிக்க, ஒன்பது போ உக்காந்து சாப்பிட்டது எல்லாம் அந்தக் காலம் இப்போ நிலமையே வேறங்க. உத்தியோகம் புருஷ லெட்சணம்' அப்படீம்பாங்க. இப்போ கால் லெட்சம், அரை லெட்சம் சம்பாதிச்சாதாங்க வருங்காலத்தில் ஒரு புருஷனா ஆகப் போறவனுக்கு லட்சணம் அப்படீங்கறாங்க. ஆனாலும் அதிகமா வருமானம் வந்தாலும், 'கட்டு இன்கம்டாக்ஸ் ன்னு சொல்றாங்க அப்படி இந்த டாக்ஸ் கட்டுறதைக் கூட சிலருக்கு ஒரு தொழிலா ஐடியா சொல்லிக்கொடுக்கிறது கூட சிலருக்கு ஒரு தொழிலா இருக்குதுங்க, என்னங்க பண்றது பைபிள் காலத்திலேயே இந்த வரி கட்டுற பழக்கம் இருந்ததா நற்செய்தியில் வாசிக்கிறோம்
மனுசனுக்கு மனுசன் சம்பளம் குடுத்த காலம் போய், இப்போ மனிதனுக்கு அவன் கண்டுபிடித்த மிஷின் பணம் குடுக்குதுங்க. உள்ளே போய் கார்டை காட்டினால், கார்டு நான் மாது வந்திருக்கேங்குற விவரம் சொல்லுது சடக், சடக் குன்னு எண்ணி படக். படக்குன்னு பணத்தை நீட்டுதுங்க, காலம் மாறிப் போச்சுங்க, இப்போ கார்டுதான் கடவுள்!
[15:25, 13/04/2021] Prakash fr: குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்று ஒரு பழமொழி இருக்குதுங்க. அப்பன் பாட்டன் உழைச்சி சேர்ந்த சொந்தை குந்திக்கிட்டு தின்னாலும், நின்று கிட்டு தின்னாலும் கரையத்தாங்க செய்யும். இப் பாருங்க குந்திக்கிட்டு பிச்சை எடுக்குறது கூட ஒரு தொழில்தாங்க. ஆனா அதைச் செய்யிறதும் ஒரு லேசுப்பட்ட வேலைன்னு நினைச்சுடாதீங்க, அதுக் கும் ஒரு திறமை வேணுமுங்க
இளைஞர்களை எங்கிட்ட குடுங்க. நான் எல்லாத் தையும் மாத்தி காட்டுறேன்னு விவேகானந்தர் சொன் னாருங்க. ரொம்ப கரெக்டுங்க. ஏன்னா இளைஞர் களுக்கு உடலில் வலுவும், மூளையின் செயல்பாடு களும் அபாரமாக இருக்குமுங்க. ஆனா பாருங்க கவர்ன்மென்டுலே ஐம்பத்து எட்டு வயது வரைக்கும் உழைச்சா போதும் அப்படீங்கறாங்க. ஏன் அதுக்கு மேல உழைக்க முடியாதா? முப்பத்து எட்டு வயசுல உழைக்க முடியாம போனவங்களும் இருக்காங்க ஐம்பத்து எட்டு வயசுல ஆக்டிவா இருக்கிறவங்களும் இருக்காங்க, எல்லாத்திற்கும் மேல ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல. அதையும் பார்க்கணுமுங்க. செய்யும் தொழிலே தெய்வம்' அப்படீம்பாங்க
அந்தத் தெய்வத்தை நாம் மதிக்கணுமுங்க. வாழ்க் கையில் நாம் எவ்வளவோ செலவு பண்ணுவோம். ஆனா லேபர் சார்ஜ்ன்னு வரும்போது ஏங்க...? ஒரு தொழிலாளி செய்யிற எல்லா வேலையையும் நாம் செஞ்சிட முடியுமாங்க? அப்படி இருக்கிறப்ப நாம் செஞ்சிட முடியுமாங்க? அப்படி இருக்கிறப்ப நியாயமா அவங்களுக்கு சேர வேண்டியதை கொடுத்திடணு முங்க. ஆனாலும் அவங்களுக்குச் சேர வேண்டியது கண்டிப்பா அவங்களுக்குக் கிடைச்சிடுமுங்க.
உலகில் மனிதனா பொறந்தவன் கண்டிப்பா முடிஞ்ச வரைக்கும் உழைக்கணுமுங்க. அது அவன் கடமை. உழைக்கலேன்னா அவன் முடங்கிப் போயி டுவாங்க. உழைப்பில் சலிப்பு கூடாதுங்க. அளவான உழைப்பு, உழைக்கிறவங்க இரவு அருமையான தூக்கத்திற்கு சொந்தக்காரவுங்க. சோம்பேறியாய் தூங்குபவர்கள் மீது வறுமை வழிப்பறிக் கள்வனைப் போல் பாயுமின்னு நீதிமொழி கூறுதுங்க பூ தினம் பூக்குது பாருங்க, அதுமாதிரி உழைக்கணுமுங்க உழைக்க உழைக்க நம் திறமை வளருமுங்க
எடுத்த முயற்சியில் வெற்றியா...? பெற்றுக்கொள்! எடுத்த முயற்சியில் தோல்வியா.? கற்றுக்கொள்! உழைப்பே உயர்வு!!
எழுத்து - மரிதிவ்யதாஸ்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.