நம் குடும்பங்களும் கோவில்களே! | Rosammal
பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார். அன்னை மரியாவும், யோசேப்பும் கடவுளின் வார்த் தையில் நம்பிக்கை வைத்து தங்களது குடும்ப வாழ்வை நடத்தினர். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதை மட்டும் நிரந்தர அர்ப்பணமாகக் கொண்டு திகழ்ந்தால் சுற்றி வாழும் ஊரார் அனைவருக்கும் ஒளி விளக்காய் திகழ்வோம் என்பதில் ஐயமில்லை. நாசரேத்து ஊரில் திருக்கோயிலாக இக்குடும்பம் வாழ்ந்தது. உடலில் நோாய்களில்லா உரமும் மனத்தின் மத்தியில் கடவுளை நிலையாகக் கொண்டு இருப்பதால் பிரசன்ன ஒளியில் எழும் ஞானமும் வாழ்வை சுறுசுறுப்பாக்கி, கடவுளுக்கு உகந்ததை மட்டும் எப்போதும் செய்திட வழிவகுக்கும் இதனால்தான் குடும்ப வாழ்வின் புகழும் பெருமையும் அன்போடு நல்வழியில் செல்வதாகும். எனவே அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்கிறார் திருவள்ளுவர்
திருமண நாள்: திருமணம் என்பது அடிப்ப டையில் மனிதத்தை உருவாக்குவது. மனிதத்தை அன்பில் ஆழப்படுத்துவது. மனிதத்தை ஒரு கடப்பு நிலைக்கு அழைத்துச் செல்கிறது. திருமணம் ஓர் உடனிருப்பு என்று அழைக்கப்படுகிறது. உடனிருப்பில் உருவாகும் அன்புறவில் ஒன்றிப்பு உருவாகிறது படைக்கும் இறைவனோடு ஒன்றுபடக்கலந்து மணமக்கள் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள்
திருமணத்தின் மாண்பும், குடும்ப வாழ்வும்: திருமணத்தின் மாண்பு, 'திரு' என்றால் 1. மேன் மைக்கான சிறப்பு அம்சம், 2. இறைவனோடு தொடர் புடைய திருக்கோயில், திருவடி. 3. மங்களமான சொற்களுக்கு முன் இடப்படும். (எ.கா) திருமணம் திருமாங்கல்யம். 'மணம்' என்றால் 1. மணம் வீசுதல்
2. ஒரு பொருளுக்குரிய வாசனை கமழ்தல், இரு மனங்கள் இணையும் இல்வாழ்வில் இறை பிரசன்னம் எங்கும். எதிலும் மணக்க வேண்டும் எனவேதான் இம்மணம் 'திருமணம்' என்று அழைக்கப்படுகிறது
இயேசுவின் புதிய அறநெறி: மாற்கு 10:9 - இனி அவர்கள் இருவரல்ல. ஒரே உடல். கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்றார். இருவரும் ஒருடலாக ஒருங்கிணைந்து வாழ வேண்டும். இக்குடும்பம் என்னும் பள்ளியில் இறை வன்தாமே ஓர் ஆசிரியராக இருந்து அக்குடும்பத்தை அன்பில் வளர்த்தெடுக்கிறார். இவ்வாறு குடும்ப வாழ்வில் இறையுறவும், மனித உறவும் பிரிக்க முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்துள் ன
இன்றைய நம் குடும்பங்கள்
திருமணத்தின் உயரிய மாண்புகள் நம் குடும் பங்களில், நம் பேச்சில், செயலில், நம் வாழ்வில் இடம்பெறுகின்றனவா? நம் குடும்பங்களில் திருமண வாழ்வு மணக்கிறதா? இறை பிரசன்னம் கமழ்கிறதா? சிந்திப்போம். குடும்பம் என்பது ஒரு கோயில். சிறந்த
நல்லதொரு பல்கலைக்கழகம் குடும்ப வாழ்வு என்றால் குடும்பம் உயிருடன் இயங்குவது என்ப தாகும். குடும்பம் என்பது கூடி வாழும் ஒரு சமூக அமைப்பாகும். வாழ்வு என்றால் உயிருடன் இருந்து இயங்கும் நிலை ஆகும்
இறைவார்த்தை அடித்தளமாக...
நம் குடும்பங்கள் உயிரியக்கத்தோடு இருக்க இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட வேண்டும். கணவர் நல்லறிவோடும். மனைவி மனத்துணிச்சலோடும் வாழ வேண்டும் இவ்வாறு கணவன், மனைவி அன்போடும், பணி வோடும் வாழ்ந்தால்தான் நன்கு செபிக்க முடியும் என்கிறார் பேதுரு (பேதுரு 3:1-7),
பேதுருவின் கருத்துக்களோடு குடும்பம் அன்பில் வாழ்ந்தால் யோவான் 15:12). தியாகத்தில் நிலைத் தால் (எபேசி 5:250), அங்கே மன்னிப்பு ஆறாக ஓடினால் (மத் 18:21-22), கணவனும், மனைவியும் நண்பர்களாக (யோவான் 15) சமத்துவத்தோடு வாழ்ந்தால் (தொநூ 1:27). ஒருவரை ஒருவர் பாராட்டினால், ஒருவர் ஒருவருக்கு நன்றி சொல்லி வாழ்ந்தால், கூடிச் செபித்தால், இறைவன் தந்த மக்களைப் பொறுப்புடன் வளர்த்தால். அதுவும் நற்செய்தியின் மதிப்பீடுகளில் வளர்ந்தால், தங்களின் தாய், தந்தையரை, குழந்தைகளைப் போற்றி வளர்த் தால், குழந்தைகளுக்குத் தேவையான கல்வியறி வைத் தந்தால் நம் குடும்பங்களும் இறைவன் வாழும் கோவில்களே.
முன்மாதிரிக் குடும்பம்: திருக்குடும்பத்தின் சாயலை நமது குடும்பங்கள் கண்டு பாவிக்க வேண்டும். திருக்குடும்பத்தில் பிணக்குகள் இல்லை. கடவுளே மையம். ஆடம்பர வசதிகளில்லை . எளிமையும். தாழ்ச்சியும் இருந்தது. நிறையன்பு அனைவர் உள்ளத்திலும் இருந்தது. “பொல்லாரின் குடி வேரோடு அழியும். நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும் (நீமொ 14:11).
திருக்குடும்பம் இறைவனில் இணைந்த குடும்பம் என் குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ !" (2சாமு 23:5) என்கிறார் தாவீது அரசர் ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: "நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல், ஏனெனில் இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையாளனாகக் காண்கிறேன் (தொநூ 7:1).
நல்ல குடும்பம் என்பதை நேர்மை என்ற அளவுகோல் கொண்டே கடவுள் அளவிடுகின்றார். நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும் என நீதிமொழி நமக்கு அறிவுறுத்துகின்றது.
இறைவன் கண்டிப்பும், பாசமும் நிறைந்த தந்தை. இறைவனோடு இணைந்திருந்தால் குடும்பம் தழைத்தோங்கும். மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியதால் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார் (விப 1:21). இறைவனுக்கு அஞ்சி வாழ்ந் தால் தீமை நம்மை நாடாது, மாறாக செழிப்படை வோம். நாம் இறைக்குடும்பத்தோடு இணைக்கப்பட்ட வர்கள். எனவே பெருமையடைவோம்.
வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது. பேலன்ஸ் தவறாமல் இருக்க வேண்டும் அதோடு நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன். வாழ்க்கை தடுமாறாமலும், தடம் மாறாமலும் இருக்க சிறந்ததொரு இலட்சியம் வேண்டும்.
"இலட்சியவாதிகளின் இதயம் நரம்பிழைகளால் அல்ல. நம்பிக்கை வலைகளால் பின்னப்பட்டிருக்க வேண்டும். இலட்சியத்தில் நம்பிக்கை உள்ளவன் எப்போதும் ஏமாற்றம் அடைய மாட்டான்" என்கிறார் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.
இத்தருணத்தில் மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்றாலும் மரணம்தான்" என்னும் மாமேதை அம்பேத்கார் அவர்களின் வார்த்தைகள் நம் இலட்சிய வாழ்வுக்கு உரமாகட்டும் நல்ல இலட்சியத்தோடு வாழ்வோம்.
இமயம்வரை உயர்வோம்!
எழுத்து - சகோ. ரோசம்மாள்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
stellaruby1950@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.