செயல் வடிவம்

“ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். யாக்கோபு 2-18. நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆபிரகாம்  தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்.

அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது .

இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்.

நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத்  இதன் மூலம் தெரிகிறது .

ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை நம்புகிறேன் என்று சொல்வது அல்ல இறை அன்பு. அதை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும். நம் வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது என் இறைவன் இதை கடந்து செல்ல செய்வார் என்று நம்ப வேண்டும். அவர் நன்மையை அன்றி தீமையை எனக்கு விட மாட்டார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். 

ஜெபம்: ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை பெருக பண்ணவும், அவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் செயல்படுத்தி உம் பிள்ளைகள் நாங்கள் என்று நிரூபிக்கவும் அருள் தாரும். 

நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் உமக்கு  ஏற்புடையவராக வாழ அருள் தாரும். ஆமென்.

Daily Program

Livesteam thumbnail