உலக மிதிவண்டி நாள் | June 3

    2018 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது. காரணம், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி என்பதனை அங்கிகரிப்பதற்காகவே. 
    அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். உலக மிதிவண்டி நாள் தற்போது வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது. 
    இந்தியாவில் 1890 களில் சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி உள்ளது. 1910 துவங்கி 1946 வரை சுமார் 2.5 பில்லியன் சைக்கிள்கள் இந்தியாவில் இறக்குமதியாகி உள்ளன. ராலி, பி.எஸ்.ஏ, ரட்ஜ், ஹம்பர் என பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது.
    1940 களில் இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர். அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்திப் பணியை தொடங்கினர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மிதிவண்டியின் தனித்தன்மை, நீண்ட ஆயுள் மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதற்காகவும், இது ஒரு எளிய, மலிவு, நம்பகமான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து வழிமுறையாகும். சைக்கிள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வளர்க்கும் ஒரு நல்ல விருப்பமாகும்.