கருகும் பூக்கள் | Ashwin

கற்க வேண்டிய
கரங்களோ,
கல்லு உடைக்குது...!
பட்டம் விட்ட
விரல்களோ,
பட்டாசு செய்யுது...!
பறந்து திரிஞ்ச
பட்டாம்பூச்சி,
பழத்த விக்குது...!
அர இஞ்சு
வயித்துக்கு,
ஆடு மேய்க்குது...!
அப்பன்பட்ட
கடனுக்கு,
ஆட்டோ கழுவுது...!
செருப்பு வாங்க
வழியில்லாம,
செங்கல் சுமக்குது...!
இங்க,
வறுமை ஒழிக்கும்
கூட்டமெல்லாம்
வசதி பாக்குது...!
அங்க,
கருத்து பேசும்
கட்சியெல்லாம்
ஊழல் செய்யுது...!
இதுல,
வசதியற்ற வீட்டில்
நிதம்
வறட்சி ஆளுது...!
அதுல,
கனவுகண்ட
பூக்களெல்லாம்
கருகி சாகுது...!
- அஸ்வின்
Daily Program
