எல்லாம் இறை அன்பே! | Jayaseeli

எல்லாம் இறை அன்பே...

சூன் மாதம் நம் இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மாதம். அன்பிற்கு அன்பை கொடையாகக் கொடுக்கும் மாதம். அன்பை அன்பால் ஆட்கொள்ளும் மாதம். இதயம் என்றால் அன்பு அன்பு என்றால் இதயம். அன்பால் ஆன இதயம் இயேசுவின் திரு இதயம். கடவுளைப் பற்றிய எத்த னையோ விளக்கங்களும், வரையறைகளும் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றிலும் மேலானது அன்பே கடவுள் என்னும் வரையறை யோவான் கடவுள் அன்பாயிருக்கிறார் என்றால் அந்த அன்பு வெளிப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். ஏனெ னில் அன்பு என்பது தன்னகத்தே மட்டும் இருக்க முடியாது. கடவுளின் அன்பு வெளிப்படுத்தப்பட்டது கிறிஸ்துவின் மூலம்தான். இயேசுவின் இருதயம் நம் அன்பிற்காக, நம் உறவுக்காக, நம் உணர்விற்காக துடிக்கும் இதயம். இயேசுவின் இதயத்தோடு இதயம் வைத்துப் பேசினால் நம் எண்ணங்கள், நினைவுகள் உள்ளத்தில் உள்ளது எல்லாம் அவருக்குத் தெரியும்.

இயேசு பாவிகளின் இல்லங்களுக்குச் சென்றார் அவர்களோடு உணவு உண்டார் (லூக் 7:36-38) ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையே பெரியது என்றுரைத்தார் லூக் 19:7-8), அவர் காணாமல் போனவற்றையே தேடியே வந்தார் (மாற்கு 12:41-44). இவ்வாறு அன்பிற்காக ஏங்கித் தவித்து தமது அன்பை வெளிப்படுத்தியது இயேசுவின் திரு இருதயம். அதே அளவிற்கு தம் பிள்ளைகளின் அன்பை பரிபூரண மாக அறிந்த இன்னொரு இதயம் மரியாயின் மாசற்ற திரு இருதயம், இரண்டு இதயங்களுடன் இணை வோம். கள்ளமற்ற அன்பினால் கரை சேர்வோம் உறுதியுடன்

ஜூன் 5ஆம் நாளை ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடுகிறோம் இந்த நாளில் நமது மனித வாழ்வு இயற்கையோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்று நாம் சிந்தித்துப் பார்த்து இயற்கையைப் பாது காக்க முடிவெடுப்போம். இயற்கையைக் கொடை யாகத் தந்த இறைவனை வாழ்த்துவோம். இறை வனின் வள்ளல் தன்மையை இயற்கையில் பார்த்துப் பாராட்டவும், இயற்கையால் வாழ்வு பெறுகின்ற நாம் படைப்பின் நாயகனுக்கு நன்றி கூறவும் கடமைப் பட்டுள்ளோம்

நாம் பார்த்து ரசிக்கும் இந்த இயற்கையின் அமைப்பும், அழகும் இறைவனால் படைக்கப்பட்டது இப்படைப்பே இறைவனின் வெளிப்பாடாகும் இவ்வுலக இயற்கைச் சூழலை கடவுளே உருவாக்கி யிருப்பதால் அது புனிதமானது, போற்றுதற்குரியது. அந்த இயற்கைச் சூழலில் நம் முன்னோர்கள் கடவு ளைக் கண்டு ஆராதித்து இருக்கிறார்கள். ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இவ்வியற்கை புனிதமானது நாம் ஒவ்வொருவரும் புனிதமானவர்கள். எனவே போற்றுதற்குரியவர் என்பதையும் இவ்வியற்கையே நமக்கு நினைவுறுத்துகிறது

இயற்கையை படைத்த கடவுள் இன்னும் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கிறார். இப் படைப்பை தாம் மட்டும் தனியாகச் செய்யாமல் நம்மையும் உடன் படைப்பாளர்களாக இருந்திட அழைக்கின்றார். படைக்கப்பட்ட மனிதர்களாம் நமக்கு, இயற்கையில் நமக்கு தேவையுள்ள அனைத் தையும் நாம் சுதந்திரத்தோடு பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில். அதே இயற்கையைப் பாதுகாத்துப் பராமரிக்கவும் நம் சுதந் திரத்தில் கடமையும், மிகுந்த பொறுப்பும் இருக்கிறது (தொநூ 1:28). இயற்கையை நேசிக்க சுற்றுச்சூழல் கல்வியைக் கற்பதோடு நெகிழிப் பைகளை அகற்று தல். ஏரி குளங்களைத் தூர்வார்தல், மரங்களை நடுதல், பள்ளிகளில், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பராமரித்தல் இவைகள் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்

"வாழ்க்கைக்காக கல்வி! வாழ்க்கையிலிருந்து கல்வி! வாழ்க்கை முழுவதும் கல்வி என்று காந்தியடிகள் கல்விக்கு இலக்கணம் வகுத்தார். இக்காலக் கல்வி எல்லா நிலைகளிலும் நிறைவு தருவதாக எல்லா சவால்களையும் சமாளிக்கும் சாதனமாகவும் அமைய வேண்டும். எண்ணங்கள் வலுவானவை. நம் சிந்தனைக்குள் நல் சிந்தனைகள் சிறகடித்தால் உள் உறுப்புக்கள் மகிழ்கிறது. சிந்தனை குளிர்கிறது. சினம் மறைகிறது. மனம் இறகுபோல் இலகுவாகிறது. எண்ணங்கள் உயர வாசிப்பது நல்லது. வாசிப்பதை வாழ்வாக்கினால் வாழ்வு வசப் படும். இத்தகைய உயரிய நோக்கத்தோடு கல்விப் பணி ஆற்றப்பட்டால் கல்வி வாழ்க்கையாகிவிடும். இருக்கின்றபடியே இருக்கட்டும் என்பான் சாதாரணமானவன். இன்னும் ஒரு படி உயரட்டுமே என்பான் சாதனையாளன். உயர்த்திப் பிடிப்பதே உயர்ந்த இலட்சியம் என்பான் இமாலயப் படைப்பாளன்.

மனங்களை உயர்த்திப் பிடிக்க, மானுடத்தை உயர்த்திப் பிடிக்க மனித மாண்பை உயர்த்திப் பிடிக்க வசமான கல்வி வாய்க்கட்டும் இவ்வாண்டில் இறைமகன் இயேசு தம் வாழ்நாளில் ஏழைகளையும், அகதிகளையும், விதவைகளையும் ஏற்று அவர்களை அன்பு செய்து தமது இரக்கத்தை வெளிப்படுத்தினார். அன்பு இருக்கும் இடத்தில் எல்லா வெளிப்பாடும் தெரியும். இந்த முழுமையான அன்புதான் ஆன்மாவின் சுயரூபம். அன்பு கூடச் சில மாறுதல்களுக்கு உட்படுகிறது. தேவைப்படும் நேரங்களில் பரிவாக மாறுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு ஆறுதல் சொல்கிறது. சூழ்நிலையை புரிந்து கொண்டால் போதும். அன்பு நிரந்தரமாகத் தங்கிவிடும்.

பிறரின் குறையைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள் வதற்கு அன்பு காரணமாகிறது. இனிமேல் நீ இனிப் பாக இருக்க வேண்டும் என்று சக்கரையிடமோ அல்லது "ஏய்... மிளகாயே, இத்தருணத்திலிருந்து நீ காரமாக இருக்க வேண்டும் என மிளகாயிடமோ யாரும் சொல்வதில்லை. இனிப்பும், காரமும் அவற் றின் இயற்கைக் குணங்கள். மனிதனின் மறுபெயர் அன்புதான். இயற்கையிலேயே நமக்குச் சொந்தமாக அமைந்திருக்கும் ஒரே உணர்வு இந்த அன்பு மட் டுமே. எனவே அன்பு செய்வோம். மனிதனாக அல்ல புனிதனாகவே வாழ்வோம். அகதிகளை, ஏழைகளை நேசிப்போம் "வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்
நம்மோடு தினமும் உறவு கொள்ளும் இறைவனோடு உறவு கொண்டு வாழ வேண்டுமென்றால் இறைவன் யாரு டன் எல்லாம் உறவு கொண்டிருந்தாரோ அவர்களுடன் நாமும் சரியான உறவு கொண்டு வாழ வேண்டும்.

உண்மையான இறைபக்தன் தனது பக்தி முயற்சிகளின் சிகரத்தினை அடைந்தால் அங்கே இறை வனைக் காண்பான். இறைவன் ஏழைகளை சுட்டிக்காட்டி போ! அத்தான் என் இதயம், என் மக்கள் வாழ்வு உயரப் பாடுபடு எனத் திருப்பி அனுப்பி விடுவார் என்கிறார் தாமஸ் மெர்டன், சுயநல எண்ணங்களைச் சுட்டெரிப்போம். அப் போது உறவின் உச்சியில் ஒவ்வொரு உயிரும் அமர்ந்து கொண்டு உலக ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கும். அந்தப் புரட்சியின் சபதத்தில் பூமி தன் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும்

இரக்க உணர்வை விட. பரிவு கொண்ட நெஞ்சம் ஈரமும் அன்பும் கொண்டு பிறர் துயர் துடைப்புக்காய் தன்னை உடனே அர்ப்பணிக்கும். இயேசு பரிவு கொண்டு மக்கள் பசியாற்ற அப்பங்களைப் பலுகச் செய்தார். மனங் கள் மகிழ்கின்றன. காட்டு மல்லிகை, காட்டுச் சந்தனம் கடலின் முத்து இவை பகிரப்படும் போது மதிப்பு பெறுகின் றன. அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சில்தான் ஆனந் தம் பூந்தோப்பாகும், சீடர்கள் மக்கள் மேல் பரிதாபம் கொள்கின்றனர். விலாசமிழந்து, விளிம்பு நிலையில் விரக்தி அடைந்து நிற்கும் ஏழை மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் பணபலம் படைத்த வருக்கு பக்க பலமாய் நிற்பது அந்தியை அங்கீகரிப்பதாகும். தானியக் கிடங்கில் பதுக்கும் உணவு பசியால் தவிப்போ ருக்குரியது அல்லவா! நாம் அடுக்கி வைத்திருக்கும் அளவுக்கதிகமான துணிகள் ஆடையற்றவர்களுக்குரியது அல்லவா

வெளிச்சத்திற்கு இல்லை விலங்கு, காற்றுக்கு இல்லை கட்டுப்பாடு நன்மைக்கும், உண்மைக்கும் அடைப்புக்கள் இருக்க முடியாது. மாற்ற முடியாதது என்று எந்த நிலை மையும் இல்லை. நம்பிக்கையற்றவர்கள் என்று எந்த மனி தரும் இல்லை. ஆழமான உண்மையான அன்பு செலுத்து வோரின் திறமையால், தியாகத்தால் மாற்றியமைக்கப்பட முடியாத சூழ்நிலை என்று எதுவுமே இல்லை

அன்பினால் எதையும் வெல்வோம்! இயேசு அன்பால் எல்லாம் முடியும் என்று சொல்வோம்!

எழுத்து 

சகோ. ஜெயசீலி

 

 

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

[email protected]

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.