எங்கள் அடைக்கலமே

 உனக்கும் பெண்ணுக்கும்,  உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

தொடக்க நூல் 3-15.

ஆண்டவர் நம் ஆதி பெற்றோரின் காலத்திலேயே அன்னை மரியாவை முன் குறித்தார். அருள் நிறைந்தவராகிய அன்னை தாழ்ச்சி, பொறுமை, நிரம்ப பெற்றவராக இருந்தார். 

ஆதாம் ஏவாளுடைய கீழ்ப்படியாமையினால் பாவம் உருவானது.  அன்னை மரியாளின் கீழ்ப்படிதலால் மனுகுலத்திற்கு  மீட்பு கிடைத்தது. 

ஆதித்தாய் ஆண்டவரின் கட்டளையை மீறினாள் . அன்னை மரியா சந்தேகப்படாது கீழ் படிந்தார்.  

ஆதிதாய் பாம்பின் ஆலோசனையை கேட்டாள். 

மரியன்னை ஆண்டவரின் வார்த்தையை தவிர  வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை. 

ஆதித்தாய் அதிக பேராசையினால் பழ மரத்தை நோக்கி பார்த்தாள். பழத்தை பெற்றாள். அந்த பேராசை பேரின்ப தோட்டமாகிய ஏதேனை இழக்க செய்தது.  மரியன்னை மீட்பு பயணத்தில் ஆண்டவரின் விருப்பத்துக்கு ஒப்புக்கொடுத்து சிலுவை மரத்தை நோக்கி பார்த்தாள். இயேசுவை பெற்றாள். அழியாத விண்ணக தோட்டத்தை சுதந்தரித்து கொண்டாள். 

மரியன்னையின் பிள்ளையாக வாழ்வோம். அன்னையின் அடிசுவடுகளை பின்பற்றுவோம்.  தினமும் ஜெபமாலை சொல்லுவோம். மரியன்னை யை  நம் வீட்டின் எஜமாட்டியாக ஏற்று கொள்வோம். அன்னை நமக்காக பரிந்து பேசுவார். பாவத்திலிருந்து நாம் விடுதலை அடைய வழி செய்வார்.  

 

பரலோக இராக்கினியே, ஓ மரியே,  எங்கள் அடைக்கலமே,  ஏவையின் பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் , உம்முடைய பிள்ளைகளாய் உம் பாதம் வந்திருக்கிறோம். அம்மா உம்மை நம்புகிறோம். எங்களை பாவத்திலிருந்து காத்தருளும் எங்களைக் கைவிடாதேயும். மரண நேரத்தில்   துணையாயிரும்.  எங்களுக்காக உம் மகன் இயேசுவிடம்  பரிந்து பேசும். ஆமென்.