இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் நாளானது தேசிய கடல்சார் தினமாகக் கொண்டாடப்படுகிறது.