வெற்றியின் இரகசியம் நம்பிக்கை.. | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
இரண்டு நண்பர்கள் படகில் பயணம் செய்தனர். நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று புயல்காற்று வீசியது. படகு அங்குமிங்குமாக இழுத்துச் செல்லப்பட்டு ஒரு பாறையின் மீது மோதி உடைந்து நொறுங்கியது. நண்பர்கள் இருவரும் உடைந்த பலகை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தனர். நம்பிக்கையிழந்த ஒருவன், "நாம் இனி கடலில் சாகவேண்டியதுதான். எங்கு பார்த்தாலும் தண்ணீர். நிலப்பகுதி காணப்படவில்லை" என்றான். மற்றவன், "நம்பிக்கையை இழந்துவிடாதே. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்" என்றான்.
படகில் புதிய உலகைக் தன் நண்பர்களுடன் கொலம்பஸ் கண்டுபிடிக்கப் புறப்பட்டான். 20 நாட்களில் அமெரிக்காவைக் கண்டுபிடித்து விடலாம் என்று கூறினான். இருபது நாட்களும் முடிந்துவிட்டன. நிலப்பகுதி காணப்படவில்லை. தன் நண்பர்களுக்கு நம்பிக்கை கொடுத்து பயணத்தைத் தொடர்ந்தனர். இருபத்து நான்காவது நாளில் புதிய உலகை அடைந்தனர். "நாமும் நீந்திச் செல்வோம். தரைப்பகுதியை அடைவோம் " என்றான் நம்பிக்கை உள்ளவன்.
பல மணி நேரம் நீந்திச் சென்று ஒரு தீவை அடைந்தனர். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அந்தத் தீவில் மனிதர்களோ, மற்ற உயிரினங்களோ கிடையாது. எனவே அங்குயாரும் செல்வதில்லை. தீவில் உள்ள சில காய், பழங்களைக் கொண்டு பசியாற்றிக் கொண்டனர். இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. நம்பிக்கை இழந்த நண்பன், "இதுவரையிலும் யாரும் நம்மை வந்து காப்பாற்ற வில்லை. குளிர், பசி அதிகமாக இருக்கிறது. இனி இங்கேயே சாக வேண்டியதுதான்" என்றான். மற்றவன் "நம்பிக்கையை இழந்து விடாதே, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்" என்றான்.
அன்று இரவு உறங்கும்போது கடவுள், நம்பிக்கை உள்ளவனுக்கு ஒரு நல்ல சிந்தனையைக் கொடுத்தார். கற்கால மனிதன், இரண்டு கற்களை ஒன்றோடொன்று உரசி நெருப்பைக் கண்டுபிடித்தான் என்ற நல்ல சிந்தனையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறினான். மறுநாள் மாலை காய்ந்த இலைகளைக் குவித்தான். இருட்டுகிற நேரத்தில் இரண்டு கற்களை எடுத்து உரசினான். நெருப்பைக் கொண்டு காய்ந்த இலைகளைப் பற்ற வைத்தான். கப்பலில் தூரமாகச் சென்றவர்கள் நெருப்புப் பற்றி எரிவதைப் பார்த்து, தாங்கள் சென்ற கப்பலைத் தீவுப்பக்கம் திருப்பினர். கப்பலிலிருந்து இறங்கிவந்து, பசி, தாகத்தோடு குளிரில் நடுங்கிக் கிடந்த இருவரையும் காப்பாற்றினர். இரண்டு நண்பர்களும் மண்டியிட்டு தங்களைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறினர்.
தன்மீது நம்பிக்கை
பிறர்மீது நம்பிக்கை
கடவுள்மீது நம்பிக்கை உள்ளவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்,
வெற்றியின் இரகசியம் நம்பிக்கைதான்.
"...அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்றார் இயேசு. மத். 15:28
நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்ல மாட்டார்.
நீமொ 22:5
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
