குறுகிய கால வாழ்க்கை! | Veritas Tamil

வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் உடையது.எவரும் பிறக்கும்போதே எதையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதுமில்லை. பிறக்கும்போது இடுப்பில் 'அரைநாண்' கயிறின்றிப் பிறந்தோம் இறக்கும்போதும் இடுப்பில் எதையும் விட்டு வைப்பதுமில்லை. நிர்வாணமாகப் பிறந்தோம். நிர்வாணமாக இறக்கின்றோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட குறுகிய காலமே வாழ்க்கையாக மாறுகிறது. இடைப்பட்ட காலமும் நிரந்தரம் இல்லை. இளமையிலிருந்து முதுமைவரை மரணம் தொடர்கிறது. சில நேரங்களில் மரணம் துரத்துகிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை பூமியைப்போல சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இன்ப துன்பம்; வேதனை, சோதனை: மகிழ்ச்சி - இகழ்ச்சி இப்படிச் சுழற்சி முறையில் வாழ்க்கைச் சுழன்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து எவரும் விடுபட முடியாது.

குறுகிய கால வாழ்வில் குதூகலமாக அதாவது மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்வோம். எவரிடமும் குரோத மனப்பான்மையின்றி வாழ்வோம். மகிழ்ச்சி என்பது பொருளைச் சார்ந்தது மட்டும் இல்லை. மனம் சார்ந்தது. மனம் என்பது எண்ணம் சார்ந்தது. எண்ணம் போல வாழ்வு என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா. வாழ்வது அவரவர் கையிலடா என்றார் கவிஞர். ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் தொடங்குவோம். ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வைப்போம். மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா? மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? வாழ்க்கை விதி எல்லாருக்கும் ஒன்றுதான் வாழ்க்கை எவருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. நாம் பார்க்கும் விதத்தில்தான் இருக்கிறது. என் வாழ்க்கை விடியாது என் வாழ்க்கை உயராது! என்று எதிர்மாறாக எதையும் எண்ண வேண்டாம். எதிர்மறை எண்ணமே வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

கிரேக்க நாட்டு மகா அலெக்சாண்டர் மன்னன் தன் தந்தை பிலிப்பு மன்னனைவிட அனைத்திலும் சிறந்து விளங்கினான். 'அவனுக்கு நிகா, அவனே என்று மக்கள் போற்றினர். ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினான். வீரத்தில் முன்னிலை வகுத்தான். ஒரு பகைநாட்டின் மீது படையெடுத்துச் சென்றால். பகைவருடன் போரிடாமலேயே பகைவர் மன்னனின் படைவலிமை கண்டு, அடி பணிந்து சமாதானம் செய்துக் கொள்வர். மன்னனுக்குக் கொடுக்க வேண்டிய பொன்னையும் பொருளையும் வரியாகக் கொடுத்துவிடுவார், போரிடாமலேயே அடுத்த நாட்டிற்குச் சென்றுவிடுவான். இப்படியாக பல நாடுகள் சரணடைந்தன. உலகத்தை முழுவதும் வென்று, 'ஒரே குடையின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணினான். மன்னன் நினைத்ததுபோல நடந்தன. ஆனால் முழுமை பெறும் முன்னர் ஒரு சோதனை வந்தது.

திடீரென்று மன்னனுக்கு 'நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. பகைநாட்டு மருத்துவர் மன்னனுக்கு உதவ முன்வந்தனர். இருப்பினும் மன்னனின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தளபதியும் வீரர்களும் மிகவும் வருந்தினர். என்ன செய்வது என்று தெரியாமல் - திகைத்தனர். மன்னன் அலெக்சாண்டருக்கு நிலைமை - நன்கு தெரிந்தது. 'இனி பிழைப்பது அரிது' என்று - நினைத்தான். தளபதியை அழைத்தான். 'நான் இறந்து = விடுவேன். என்னை சவப்பெட்டியில் வைக்கும் முன்னர் பெட்டியில் என் இரண்டு கைகளும் வெளியே நீட்டித் தெரியும்படி வையுங்கள். மேடை உயரமாகக் கட்டி, என் ஈ உடலை அதன்மேல் வைத்து, என் கைகளை உலக மக்களுக்குக் காட்டுங்கள். உலகத்தை - வென்றுவிடுவேன் என்று புறப்பட்ட மன்னன் - இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது, வெறும் கையுடன் " செல்கிறான் என்று கூறுங்கள். மன்னன் சொன்னது போலவே செய்தார்கள். 'வாழ்க்கை மன்னனுக்கும் மக்களுக்கும் ஒன்றுதான்!' கிடைக்கும் கொஞ்ச காலத்தை மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ்வோம்!
 

எழுத்து

புலவர் ஆரோக்கியம் .சி