பேச்சுத் திறமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.12.2024

ஒரு மனிதனின் வெற்றி அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

ஏமாளியாக ஏமாந்தவர்களை விட இரக்கத்தால் ஏமாந்தவர்களே
அதிகம்.

நொடிந்தவர்களின் வாழ்க்கையைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உயர்ந்தவர்களின் வாழ்க்கையைக்
குறிக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்களும் உயரலாம்.

அதாவது கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது.

பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது.

பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்.

சவால் நிறைந்த செயலில் தான் சாதனை ஒளிந்து இருக்கிறது.

அந்த சவாலை சாதனையாக மாற்ற உன்னிடம் துணிவும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது.

அதை நீ மறந்து விடாதே.சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து மழையாலும் பெரு வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எம் மக்களுக்கு எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி