வாய்ப்புகள் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.04.2024

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால் பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்.

ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும் வெற்றியின் மீதான வெறியும் வேண்டும்.

அப்போது தான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும்.

சின்னஞ்சிறு விதை போலவே நீ இன்று செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் கண்டிப்பாக பின்னாளில் விருட்சம் போல உனக்கான வெற்றியை தேடி தரும்.

தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் உனக்கு
மன அமைதி அத்தனை எளிதாகக்
கிடைப்பதில்லை.

வாழ்கையில் எனக்கு என்ன தேவை என மனதிடம் கேளுங்கள்.
அப்படி என்றால் மனதுடன் பேசுங்கள்
கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.

தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம்.
ஆனால் தோல்வியடையாத மனிதர்களே
உலகில் இல்லை.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க
                    

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி