உறவுகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.02.2025

உறவுகள்
எல்லா உறவுகளும் அவரவர் மனநிலைக்கு ஏற்றபடிதான் நடப்பார்களே ஒழிய,
உங்கள் மனமறிந்து உங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு நடக்கமுடியாது.
நானிருக்கிறேன் என்கிற உறவு கிடைத்தாலும் அது நிரந்தரமல்ல.
எனவே, எதிர் பார்க்காதீா்கள்.
உங்களை நீங்களே அரவணைத்துக் கொள்ளுங்கள்.
உங்களிடம் நீங்களே பேசுங்கள்.
உங்களுக்கு நீங்களே உரமேற்றிக் கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றி,
உங்கள் தேவைகளைப் பற்றி,
உங்கள் வாழ்க்கையை பற்றி
யோசியுங்கள்.
எதிர்பார்த்து ஏங்கி,
இல்லையென்று
புழுங்கிச் சாவதைவிட,
எதுவாயினும் அசையாது இருக்கப் பழகுங்கள்.
நான் இருக்கிறேன் என்று சொன்ன உறவுகள் எல்லாம் இன்று எங்கே இருக்கின்றாா்கள் என்றே தெரியாது!
இந்த உலகில் அனைத்தும் தேவைக்கு மட்டும்தான்.
வேஷம் போடும் மனிதர்களிடையே பாசம் காட்டி வீணாய் போகாதீர்கள்.
வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம் மனிதாபிமானமற்ற மனிதர்களிடம்.
எங்கோ நடக்கும் தவறுக்காக, யாரையோ குற்றவாளியாக பார்த்துக் கொண்டு வாழும் சமுதாயத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உங்களது நம்பிக்கையும், தைரியமும், தன்னம்பிக்கையும் தான் உங்களை வாழ வைக்கும்.
நீங்க கண்டிப்பா ஜெயிப்பீர்கள்.
நீங்கள் உங்களது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இருங்கள் வெற்றி தானாக உங்களிடம் வந்து சேரும்.
வாழ்க வளத்துடனும், நலத்துடனும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு நேர்மையும் திறமையும் உழைப்பும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களுக்கு உடல் உள்ள சுகத்துடன் நெடுவாழ்வு வாழவும் நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
