2025- யூபிலி ஆண்டின் விழுமியங்கள் - சிறப்புக் கருத்தரங்கம் !| Veritas Tamil
யூபிலி ஆண்டின் விழுமியங்கள் என்னும் தலைப்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் திண்டுக்கல், புனித தோமா அருள்பணி மையத்தில் பொதுநிலையினர் பணிக்குழுவினரால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி தலைமையேற்று ஆசியுரை வழங்கினார்.
மறைமாவட்ட அருள்பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி, சூசை ஆரோக்கியதாஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார்.
சிறப்புக் கருத்துரையாளராக தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி. மரிய மிக்கேல் பங்கேற்று, "கூட்டியக்கத் திரு அவையின் பயணிகளாகப் வழிகாட்டலில் எதிர்நோக்கின் பொதுநிலையினர்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். யூபிலி ஆண்டின் முக்கியத்துவம் குறித்தும் விவிலியம் காட்டும் விழுமியங்களையும் விளக்கிக் கூறினார்.
சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெறும் திண்டுக்கல் மறைமாவட்டப் பொதுநிலையினர் பணிக்குழுவின் செயலர் திரு. லூர்துசாமி அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்
தெரிவிக்கப்பட்டது. இவரைப் பாராட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் அவர்கள் இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கிப் பெருமைப்படுத்தினார். புதியதாகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஜாம்சன் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும் ,வரவேற்பு இக்கருத்தமர்வில் பொதுநிலையினர் பேரவை, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம், இந்தியக் கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம், பெண்கள் பணிக்குழு, வின்சென்ட் தே பால், மரியாயின் சேனை உட்பட பல்வேறு இயக்கங்களிலிருந்து பலரும் பங்கேற்றனர்.