அருளாளர்கள் கார்லோ மற்றும் ஃபிரசாத்தி உருவ தபால் தலை வெளியீடு

செப்டம்பர் 7, ஞாயிறன்று திருஅவையின் புதிய புனிதர்களாக அறிவிக்கப்பட இருக்கும் அருளாளர்கள், ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் அவர்களின் உருவப்படங்களை தபால் தலைகளாக வெளியிட உள்ளது வத்திக்கான் தபால் தொடர்புத்துறை.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி ஓவியர் ஆல்பர்டோ ஃபால்செட்டி (1878-1951) என்பவரால் வரையப்பட்ட அருளாளர் பியர் ஜோர்ஜோ ஃப்ராசாத்தியின் (1901-1925) உருவப்படம், அருளாளர் கார்லோ அகுதீஸ் (1991-2006) அவரின் புகைப்படம் தபால் தலைகளாக செப்டம்பர் 7, அன்று வெளியிடப்பட இருக்கின்றன.அருளாளர் கார்லோ அகுதீஸ், அசிசிக்கு அருகிலுள்ள சுபாசியோ மலையில், அவரது இறப்பிற்கு முந்தைய கடைசி பள்ளி பயணங்களின் போது, எடுத்த புகைப்படமான சிவப்பு நிற அரைச் சட்டை அணிந்து தோளில் ஒரு பையை சுமந்து நிற்பது போன்ற புகைப்படமானது தபால் தலையாக வெளியிடப்பட உள்ளது.
இந்த தபால் தலைகளானது, வத்திக்கானின் தபால் மற்றும் அஞ்சல் வெளியீட்டு அலுவலகம், தூய மரினோ குடியரசு, மால்டா இராணுவம் ஆகியவற்றுடன் இணைந்து வத்திக்கான் நகர மாநிலத்தின் ஆளுநரகத்தின் அஞ்சல் மற்றும் தபால்தலை சேவையால் நிர்வகிக்கப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன.
Daily Program
