புனித லாசரஸ் தேவசகாயம் - பொதுமக்களின் பாதுகாவலர். | Veritas Tamil

புனித லாசரஸ் தேவசகாயம் - பொதுமக்களின் பாதுகாவலர்.
திருத்தந்தை லியோ அவர்கள், இறை வழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைத் துறையின் மூலம் (CCBI) , புனித லாசரஸ் தேவசகாயத்தை இந்திய பொதுமக்களின் பாதுகாவலராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்திய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் மாநாடு (CCBI) அளித்த மனுவைத் தொடர்ந்து, 2025 ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு உத்தரவில் உறுதிசெய்யப்பட்டது.
இந்த சிறப்பான பிரகடனம் 2025 அக்டோபர் 15-ஆம் தேதி, வாராணாசி தூய அன்னை மரியாள் பேராலயத்தில் நடைபெறும். இது, (CCBI) பொதுமக்கள் ஆணையத்தின் மறைமாவட்ட மற்றும் மண்டலச் செயலாளர்களின் ஆண்டு தேசிய கூட்டத்துடன் ஏற்புடையதாக உள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து பொதுமக்களும், பிரதிநிதிகளும், திருஅவை தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், (CCBI) தலைவர் கர்தினால் பிலிப் நேரி பெர்ராவோ, இந்தியா முழுவதும் உள்ள ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கொண்டாட அழைத்தார்.
“புனித தேவசகாயத்தின் பக்தி, இந்திய பொதுமக்கள, கடவுளின் அன்பில் வளர, தங்கள் நம்பிக்கையினைப் பெருகச் செய்ய, திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் உற்சாகமாய் சேவை செய்ய தூண்டும்” என்று கர்தினால் பெர்ராவோ குறிப்பிட்டார்.
புனித தேவசகாயம் யார்?
புனித லாசரு தேவசகாயம் (1712–1752) கத்தோலிக்க திருஅவையால் புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய பொதுமகனும், இரத்தசாட்சியும் ஆவார்.
நீலகண்ட பிள்ளை எனப் பெயரிட்டு, தமிழ்நாட்டின் நட்டலம் பகுதியில் பிறந்த அவர், திருவிதாங்கூர் இராச்சியத்தில் (இன்றைய கேரளா மற்றும் தமிழ்நாடு) அரண்மனை அதிகாரியாகப் பணியாற்றினார். கிறிஸ்தவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, 1745-ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் மாறி, “தேவசகாயம்” எனப் பெயரிட்டு லாசரு என்றழைக்கப்பட்டார். (தமிழில் தேவசகாயம் என்றால்- “கடவுள் என் உதவி" என்பது பொருள்.
அவரது மதமாற்றம் கடுமையான துன்புறுத்தலுக்குக் காரணமானது. நம்பிக்கையைத் துறக்க மறுத்த அவர், சிறை, வதை, மற்றும் இறுதியில் 1752-இல் கொலை செய்யப்பட்டார். அவரது உறுதியான சாட்சியால் இந்தியக் கத்தோலிக்கர்களுக்கு துணிச்சலும் விசுவாசமும் நிறைந்த முன்னுதாரணமாக அவர் திகழ்கிறார்.
அவர் 2012-இல் நாகர்கோவிலில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்; பின்னர் 2022 மே 15-ஆம் தேதி, வத்திக்கான் நகரில், புனித பேதுரு பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்புனிதராக அறிவிக்கப்பட்டார்.
இன்றைய பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரி
இந்திய கத்தோலிக்க திருஅவை புனித லாசரஸ் தேவசகாயத்தை பொதுமக்களின் பாதுகாவலராக அறிவிப்பதன் மூலம், திருஅவை பணியில் பொதுமக்களின் பங்கை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் வலிமையான சாட்சியத்தை ஊக்குவிக்கவும் விரும்புகிறது.
கர்தினால் பெர்ராவோ வலியுறுத்தியது போல், இந்த பாதுகாவலர் நிலை, அந்தப் புனிதரின் இரத்தசாட்சிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; இன்றைய பொதுமக்களும் அதே துணிச்சலும் அர்ப்பணிப்பும் கொண்டு தங்கள் நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவதற்கான அழைப்பாகும்.
Daily Program
