அன்பும் இயற்கையும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.01.2025
உலகிலுள்ள அனைத்து தோற்றங்களிலும் அன்பும், அற்புதமும் நிறைந்து இருக்கிறது
அன்பு அற்புதம் தான்
நயாகரா நீர்வீழ்ச்சியாகட்டும்
இமயமலைச் சாரல் ஆகட்டும்
மேகங்களில் மறைந்துள்ள மழைத்துளியாகட்டும்
ஆழ்கடலின் அழுத்தமாகட்டும்
அனைத்திலும் அன்பும் அற்புதமும் நிறைந்திருக்கிறது
அதேபோல் அனைத்து உயிர்களிலும் அப்படியே தான்
ஓர் உயிர் தாவரம் முதல்
ஆறறிவு கொண்ட மனித மனம் வரை
அன்பையும், அற்புதத்தையும் தவிர வேறொன்றும் இல்லை
அன்பு எல்லா இடத்திலும் அற்புதமாக நிறைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல்
அதை எப்போதும் நமக்கும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறது
நாம் தான் அந்த அற்புதமான அன்பின் அலைவரிசையில் இணைந்திருக்க வேண்டும்
அந்த இணைதளுக்கு நமக்குள் இருக்கும் அன்பை உணர்ந்தாலே போதும்
இருப்பில் இருப்பதை உணர்ந்தால்
எங்கும் இருப்பது உணரப்படும்.
அன்பின் பிரவாகத்தில்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி