இயற்கையோடு பேசுங்கள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.05.2025

அலைபேசிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து பாருங்கள் உங்கள் நிலை பற்றி யோசிக்க தோன்றும்.

அலைபேசியின் அருகாமையை தவிருங்கள் அருகில் உள்ள உறவுகளின் அருமை புரியும்.

அலைபேசியை கொஞ்சம் அணைத்திடுங்கள் உங்கள் அனைத்து நடவடிக்கையும் 
இயல்பாய் ஆகும்.

காணொளியை தவிர்த்து விடுங்கள் கண்ணொளியை காத்திடுங்கள் 

கை பேசியை தூக்கி எறியுங்கள் 
காக்கை குருவிகள் வாழட்டும் 

ஓடியாடி விளையாடுங்கள் ஓய்வெடுக்கட்டும் அலைபேசி 

ஆடி பாடி மகிழுங்கள் 
ஆரோக்கியம் செழிக்கட்டும்.

வலைதள பயன்பாடு 
விலை போகும் நிலைப்பாடு 

கவலை தீர்க்காத கைபேசி 
கலகத்தை உண்டாக்கும் நீ யோசி.

உள்ளங்கையில் உலகம் என உவகை கொள்ளாதே.
இல்லமே உலகம் உதறி தள்ளாதே.

புலனம் வழியே புலன் விசாரித்தது போதும். சலனம் கொண்டு கவனம் சிதறியது போதும்.

புவனம் ஆள வேண்டிய புதினம் நீ 
பயன்பாட்டு பொருள் உன்னை பயன்படுத்தி தூக்கி எறியும்.

உருப்படியை பற்றி கொள்ளாதே 
உருப்பட வாய்ப்பு இல்லை.
உயிருள்ள நீ உணர்வற்று போவாய் 
செயலிகளால் நீ செத்துப் போவாய்.

அலைபேசியை கொஞ்சம் அடக்கம் செயயேன். 
உன்னை அடக்கி ஆள்வது அது மட்டுமே.

கைபேசியை கொஞ்சம் கைவிட்டு பாரேன். கையூன்றி என்னோடு எழுந்து வாயேன்.

இயற்கையின் படைப்பில் அனைவரும் ஒன்றாக வாழ்வோம்.

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி